13. வெள்ளை தத்துப் பூச்சி: சோகடெல்லா ப்ரூசிஃபெரா |
தாக்குதலின் அறிகுறிகள்
- நெற்பயிர்ச் செடியின் சாறை உறிஞ்சி பயிர் வளர்ச்சியைத் தடுக்கிறது. எனவே பயிர்ச்செடி வளர்ச்சிகுன்றி குட்டையாக காட்சியளிக்கும்.
- முன் தாக்குதலின்போது வட்டமான மஞ்சள் நிற திட்டுகள் தோன்றி பின் உடனே பயிர் காய்ந்து பழுப்பு நிறமாக மாறிவிடும்.
- பின் பூச்சி தாக்கப்பட்ட திட்டுகள் பரவுதல் ஏற்பட்டு முழு வயலையும் தாக்கிவிடும்.
- இளம் மற்றும் முதிர்ப்பூச்சிகள் செடியின் சாறை உறிஞ்சும். இதனால் செடியின் வளர்ச்சி குன்றி பின் காய்ந்துவிடும்.
|
|
|
பயிர்கள் காய்ந்து பழுப்பு நிறமாக மாறிவிடும். |
பயிர்கள் வளர்ச்சிகுன்றி குட்டையாக காட்சியளிக்கும் |
|
பூச்சியின் அடையாளம்
- முட்டை : நெற்பயிர் செடி சிறியதாக இருக்கும்போது பூச்சிகள் உருளைவடிவ முட்டைகளை அதன் மேல் கூட்டமாக வைத்திருக்கும். ஆனால் செடிகள் பெரிதாக இருக்கும்போது நெற்பயிரின் மேல் பகுதியில் முட்டைகளை வைத்திருக்கும்.
- இளம் பூச்சிகள் : வெள்ளை நிறத்திலிருந்து நன்கு பல் வண்ணப்புள்ளியுடைய கருஞ்சாம்பல் நிறம் அல்லது கருப்பு மற்றும் வெள்ளை நிறமாகவும், இளமையாய் இருக்கும்போது 0.6 மி.மீ அளவிலும் காணப்படும். ஐந்து வளர்ச்சிநிலை இளம்பூச்சிகள் குறுகலான தலையுடன் வெள்ளை அல்லது பாலேடு நிற உடலுடன் இருக்கும். நெஞ்சுக்கூட்டின் மேல்புறம் மற்றும் அதன் வயிற்றுப்பகுதி வேறுபட்ட அளவிலான சாம்பல் மற்றும் வெண்நிற குறிகளைக் கொண்டு குறியிடப்பட்டிருக்கும்.
- முதிர்ப்பூச்சிகள் : முதிர்ந்த தத்துப்பூச்சிகள் 3.5-4.0 மி.மீ அளவு நீளமுடன் இருக்கும். அதன் முன் இறக்கைகள் சீராக நிறமற்றும் அதில் கருநிற நரம்புகளுடனும் காணப்படும். அதன் இறக்கைகளின் சந்திப்புக்கிடையே நிலையான வெண்நிற பட்டையைக் கொண்டிருக்கும். பெரு இறக்கைகளையுடைய ஆண் மற்றும் பெண் இனப் பூச்சிகள் மற்றும் சிற்றிறக்கைகளையுடைய பெண் இனப் பூச்சிகள் ஆகியவை பொதுவாக நெல்வயலில் காணப்படும்.
|
|
|
முதிர்பூச்சி |
இளம்குஞ்சு |
|
கட்டுப்பாடு:
- இந்திய நெல் ஆராய்ச்சிக் கழகம் வெளியிட்டுள்ள வெண்முதுகுடைய தத்துபூச்சிகளை எதிர்க்கும் திறன் கொண்ட மரபணுக்களையுடைய இரகங்களான ஐஆர் 26, ஐஆர் 64, ஐஆர் 36, ஐஆர் 56, மற்றும் ஐஆர் 72 ஆகிய இரகங்களை பயிரிடுதல்.
- நெருக்கமான நடவு செய்தலைத் தவிர்த்து ஒவ்வொரு 2.5-3.0 மீட்டர் அளவிற்கு இடையே 30 செ.மீ கலவன் அகற்றும் பாதை விட்டு நடவு செய்தல் வேண்டும். இதனால் பூச்சித்தாக்கத்தைக் குறைக்க முடிகிறது.
- அதிகளவு தழைச்சத்து உரங்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
- பாசனத்தை விட்டு பயிருக்கு அளிக்க வேண்டும்.
- பொருளாதார சேதநிலை அளவு : கொன்றுண்ணி சிலந்திகள் இல்லாத நிலையில், 1 துாருக்கு ஒரு தத்துப்பூச்சி என்றஅளவிலும், சிலந்திகள் 1/குத்து என்ற அளவிலிருக்கும்போது துாருக்கு 2 தத்துப்பூச்சிகள் என்ற அளவிலும் இருக்கலாம்.
- நாற்று பருவத்தில் மோனோக்ரோட்டோபாஸ் 35 EC @ 2மிலி/லி (624மிலி/எக்டர்) தெளிக்கவும்.
- "அனாக்ரஸ் சிற்றின" வகை முட்டை ஒட்டுண்ணிகளையும், "பேச்சிகோனேட்டோபஸ் சிற்றின" வகையின் இளங்குஞ்சுகள் மற்றும் முதிர்ப்பூச்சிகள் ஆகியவற்றை நெற்பயிரில் விடுவதன் மூலம் தத்துப்பூச்சிகளைக் குறைக்கலாம்.
- வெண்முதுகுடைய தத்துப்பூச்சிகளை இயற்கை உயிரியல் கட்டுப்பாட்டுக் காரணிகள் மூலம் கட்டுப்படுத்தலாம். (எ.கா) சிறு குளவிகள் தத்துப்பூச்சிகளின் முட்டைகளை ஒட்டுண்ணியாக செயல்பட்டு உட்கொள்கின்றன.
- தாவரச்சாறுகளை பயன்படுத்துதல் : பெரியா நங்கை (ஏன்ட்ரோகிராபிஸ் பேனிகுலேடா) சாறு 3-5 சதவிகிதம் (அ) பூண்டு, இஞ்சி, மிளகாய்ச் சாறு (அ) வேப்பெண்ணெய் 3 சதவிகிதம் @ 15 லிட்டர்/எக்டர் (அ) இலுப்பை எண்ணெய் 6 சதவிகிதம் @ 30 லிட்டர்/எக்டர் (அ) வேப்பங்கொட்டைச்சாறு 5 சதவிகிதம் @ 25 கிலோ/எக்டர்.
- இரவு நேரங்களில் விளக்குப் பொறிகளை வைக்க வேண்டும்.
- வெள்ளொளித் தன்மையுடைய விளக்குப் பொறிகளை 1-2 மீட்டர் உயரத்தில் (@ 4/ஏக்கர்) பொருத்தி பூச்சிகளின் தொகையைக் கண்காணிக்க வேண்டும்.
- பகல் நேரங்களில் மஞ்சள் நிற பொறிகளைப் பயன்படுத்துதல் வேண்டும்.
- விதைப் பாத்திகளுக்கு அருகில் விளக்குப் பொறிகளை வைக்கக் கூடாது.
பின்வருவனவற்றுள் ஏதேனும் ஒன்றை தெளிக்க வேண்டும்.
பாஸ்போபிடான் |
40 எஸ்.எல் |
1000 மி.லி / ஹெக் |
மோனோகுரோட்டோபாஸ் |
36 எஸ்.எல் |
1250 மி.லி / ஹெக் |
கார்போப்யூரான் |
3 ஜி |
17.5 கிலோ / ஹெக் |
டைகுளோர்வாஸ் |
76 டபுள்யூ.எஸ்.சி |
350 மி.லி / ஹெக் |
வேப்பெண்ணெய் |
3% |
15 லி / ஹெக் |
இலுப்பை எண்ணெய் |
6% |
30 லி / ஹெக் |
வேப்பங்கொட்டை சாறு |
5% |
25 கிலோ / ஹெக் |
|
|
|
|
பூச்சிகளை எதிர்க்கும் திறன் கொண்ட மரபணுக்களையுடைய இரகம் ஐஆர் 36 |
வேப்பெண்ணெய் |
விளக்குப் பொறிகளை வைக்க வேண்டும் |
|