வெட்டுப்புழு- நெல் பயிரைத் தாக்கும் பூச்சிகள்

பயிர் :நெல்

1. நாற்றங்கால் பூச்சிகள்

2. நடவு வயல் பூச்சிகள்

 

நாற்றங்கால் பூச்சிகள்:

5. வெட்டுப்புழு: ஸ்போடப்டிரா மெளரிஸியா

 

அறிகுறிகள்:

  • புழுக்கள் நாற்றுக்களை அதிகளவில் வெட்டிவிடும்.
  • அதிக தாக்குதலின் போது மாடு புல் மேய்ந்த நிலம் போல் காட்சியளிக்கும்.
  • புழுக்கள் இரவு நேரங்களில் கூட்டம் கூட்டமாக அருகேயுள்ள வயலுக்குச் சென்று திவிரமாக தாக்கும்.

பூச்சியின் விபரம்:

  • முட்டை :முட்டைகள் வட்டமாக, பால் வெள்ளை நிறத்தில், சாம்பல் நிற முடிகளுடன் கூட்டமாக இடப்பட்டிருக்கும்.
  • புழு : புழுக்களின் இளம் வளர்ச்சி நிலையில் மங்கிய பச்சை நிறத்திலும், மேல்புறம் மற்றும் பக்கவாட்டில் மஞ்சள் கலந்த வெள்ளை நிற கோடுகளுடனும் காணப்படும். பின்னர் அவை அரை வட்ட வடிவமாக, அடர்பழுப்பு அல்லது சாம்பல் கலந்த பச்சை நிறத்தில், பக்கவாட்டில் கருப்புப் புள்ளிகளுடனும் காணப்படும்.
  • கூட்டுப்புழு :மண்ணில் கூட்டுப்புழுவை உருவாக்குகின்றன. அடர்பழுப்பு நிறத்தில் 16-17 மி.மீ நீளத்துடன் காணப்படும்.
  • முதிர்பூச்சி : முதிர் அந்துப்பூச்சிகள் நடுத்தர அளவில், பருமனாக அடர்பழுப்பு நிறத்தில் இருக்கும். முன் இறக்கைகளில் நன்கு தெரிகிற முக்கோண வடிவ கரும்புள்ளிகள் காணப்படும். பின் இறக்கைகள் பழுப்பு கலந்த வெள்ளை நிறத்தில், ஓரங்களில் மெல்லிய கருப்பு நிறத்துடன் காணப்படும்.
புழு கூட்டுப்புழு முதிர் பூச்சி

கட்டுப்பாடு:

  • பாசன நீருடன் மண்ணெண்ணெயைக் கலப்பதால் புழுக்கள் மடிந்துவிடும்.
  • வயலில் வாத்துக்களை விடுவதால் இப்பூச்சியின் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்.
  • நாற்றங்காலிலிருந்து நீரை வடித்து விட்டு, குளோர்பைரிபாஸ் 20 இ.சி. 80 மி.லி. (அ) மோனோகுரோட்டோபாஸ் 36 டபல்யு.எஸ்.சி 500மி.லி./எக்டர் என்ற அளவில் மாலை வேளைகளில் தெளிக்கவேண்டும்.
  • 5-10% பி.எச்.சி. (அ) மீத்தைல் பாரத்தியான் 2%-யை ஒரு எக்டருக்கு 25-30 கிலோ என்ற அளவில் தூவவேண்டும்.
  • மாலத்தியான் 5%@ 20 கிலோ/எக்டர் என்ற அளவில் தூவவேண்டும்.
நாற்றங்காலில் நீரை தேக்குவதால் புழுக்களை வெளிக்கொண்டு வரலாம் பாசன நீரில் மண்ணெண்ணெய் கலக்கவும் பயரின் மீது மாலத்தியான் தூவவும்