தாக்குதலின் அறிகுறிகள் :
- நாற்றுக்கள் மற்றும் இலைப்பரப்பை ஒழுங்கற்ற முறையில் உண்ணும்
- கதிர் பருவத்தில் தண்டுகளை வெட்டி உண்ணும்.
- இலை நரம்பை தவிர, இலை முழுவதையும் உண்டுவிடும்.
- இலை பரப்பின் மேல் இளம்பூச்சிகள் மற்றும் முதிர் பூச்சிகள் காணப்படும்.
|
|
நீள்கொம்புடைய வெட்டுக்கிளி |
வெட்டுக்கிளிகள் வயலில் காணப்படும் |
|
பூச்சியின் அடையாளம் :
- முட்டை : முட்டைகள் 30-40 எண்ணிக்கையில் கூட்டமாக இடப்பட்டிருக்கும். பருவ மழைப் பொழிவு தொடக்கத்தின் போது இந்த முட்டைகள் வெளிவந்து விடும். முட்டைகள் மஞ்சள் நிறத்தில், நீர்ப்புகாதவாறு பசை போன்ற பொருளால் மூடப்பட்டிருக்கும்.
- இளங்குஞ்சுகள் : இளங்குஞ்சுகள் புற்கள் மற்றும் நெற்பயிரினை உண்கின்றன.
- முதிர்பூச்சி : ஆகஸ்ட்-செப்டம்பர் மாதத்தில் இளம் குஞ்சுகள் வளர்ந்து முதிர்ப்பூச்சிகளாகின்றன. கைரோகிலைப்பஸ் பானியன் (பெருவெட்டுக்கிளி) 1½ இன்ச் நீளம் கொண்டது. முன் மார்பு பாகத்தின் மேல் மூன்று கருநிறக் குறுக்கு கோடுகள் காணப்படும். இதனால் பூச்சியை எளிதில் கண்டறியலாம்.
- ஆக்ஸ்யா நிடிடுலா (சிறு வெட்டுக்கிளி) 1 இன்ச் நீளமுடன் முன் மார்பு பாகத்தின் இரு பக்கங்களிலும் நீளவாட்டில் பழுப்பு நிறக்கோடுகளுடன் காணப்படும்.
|