மாவுப்பூச்சி

14. மாவுப்பூச்சி: பிரவேனியா ரெகி

தாக்குதலின் அறிகுறிகள் :

  • பூச்சிகள் பயிரின் சாற்றை உறிஞ்சுவதால் சேதம் ஏற்படுகிறது.
  • பூச்சித் தாக்கப்பட்ட வயல்களில் பயிர்கள் வளர்ச்சி குன்றி, நோய் தாக்கப்பட்ட பயிர்களைப் போன்றுத் தனிப்பட்ட பத்தைகளாகக் காணப்படும்.
  • உலர் நாற்றங்காலில் உள்ள நாற்றுக்கள் மோசமாகத் தாக்கப்பட்டிருக்கும்.
  • அதிக எண்ணிக்கையிலான பூச்சிகள் இலையுறைக்குள்ளேயே தங்கிக் கொண்டு சாற்றை உறிஞ்சும்.
  • இலையுறைகளில் வெள்ளைநிற மெழுகு போலக் காணப்படும்.
  • இதனை 'சூரை நோய்' (அ) 'சத்தோரா' அல்லது 'சிதைவடைந்த புள்ளிகள்' எனவும் அழைக்கப்படும்.
மாவுப்பூச்சித் தாக்கப்பட்ட வயல்

பூச்சியின் அடையாளம் :

  • முட்டை : பெண் பூச்சிகள் அதிக அளவிலான மஞ்சள் கலந்த வெள்ளைநிற முட்டைகளை இடும்/இளங்குஞ்சுகளை வெளிப்புற இலையுறைகளில் வெளியிடும்.
  • புதிதாக பொரிக்கப்பட்ட இளங்குஞ்சுகள் பயிரின் பல்வேறு பகுதிகளுக்குப் பரவுவதற்கு முன் அதிலிருக்கும் மெழுகு போன்ற நுால்களுக்குள் கூட்டமாக 6-10 மணி நேரத்திற்கு வைக்கப்பட்டிருக்கும்.
  • வெளிரிய மஞ்சள் நிற இளங்குஞ்சுகள் பயிரினைச் சுற்றி சிறிது நேரம் ஊர்ந்து சென்று செடியிலோ/தண்டிலேயோ தங்கிக் கொண்டு, பின் ஒரு நாளுக்குப் பிறகு நன்கு மஞ்சள் நிறமாக மாறிவிடும். இரண்டாவது நாளில் அதன் உடல் மெழுகுப் பொருளால் போர்த்தப்பட்டிருக்கும்.
  • முதிர்பூச்சி : இறக்கைகள் இல்லாததால் இளம்பூச்சிகளும், வளர்ச்சிபெற்ற பூச்சிகளும் ஒன்று போலவே காணப்படும். இறக்கைகள் இல்லாத இப்பூச்சிகள் இழைவடிவமுடைய பொருள்களால் போர்த்தப்பட்டிருக்கும். பெண் பூச்சிகள் சிவப்பு நிறத்தில் முட்டை வடிவமாகவும், மென்மையான உடலுடனும் இலையுறைகளுக்குள் கூட்டமாக வாழும்.
  • ஆண் பூச்சிகள் சிறியதாகவும் மெலிந்தும், வெளிரிய மஞ்சள் நிறத்தில், ஒரு ஜோடி இறக்கைகளையும் வயிற்றுப்பகுதியின் முடிவில் சூல்தண்டு போன்ற அமைப்புடனும் காணப்படும். ஆனால் வாய்ப்பகுதிகள் இருக்காது.
மாவுப்பூச்சி

கட்டுப்படுத்தும் முறை :

  • வரப்புகளிலிருந்து புல் வகைக் களைகளை அகற்றி வரப்புகளை சீர் செய்ய வேண்டும்.
  • பூச்சி தாக்கப்பட்ட செடிகளை அகற்றி அழித்தல் வேண்டும்.
  • பூச்சி தாக்கப்பட்ட ஆரம்ப நிலையிலேயே ஃபெனிட்ரோத்தியான் 50 இ.சி. 1000 மிலி, பாசலோன் 35 இ.சி. 1500 மிலி மற்றும் டைமீத்தோயேட் 30 இ.சி. 500மிலி/எக்டர் ஆகியவற்றில் ஏதேனும் ஒரு பூச்சிக்கொல்லியினைத் தெளிக்க வேண்டும்.
  • மிதைல் பாரத்தியான் 0.05% (அ) மோனோக்ரோட்டோபாஸ் 0.05% ஆகியவற்றைத் தெளிப்பதால் பூச்சித் தாக்கத்தைக் குறைக்க முடிகிறது.
  • இயற்கை பூச்சி எதிரிகளான ஸ்கைம்னஸ் சிற்றினம்-பொறி வண்டுகள், குளவிகள் மற்றும் தட்டான்கள் ஆகிய உயிரினங்களைப் பாதுகாக்கவேண்டும்.
பூச்சிகளை எதிர்க்கும்
திறன் கொண்ட மரபணுக்களையுடைய
இரகம் ஐஆர் 36
வேப்பெண்ணெய் விளக்குப் பொறிகளை வைக்க வேண்டும்