9. முள் வண்டு / ஹிஸ்பா வண்டு : டைகிளாடிஸ்பா ஆர்மிஜெரா |
அறிகுறிகள்:
- புழுக்கள் இலைகளைத் துளைத்திருப்பதை இலைகளின் மேல் தெளிவாகக் காணலாம்.
- இலைகளின் மேற்புறத்தில் பச்சையத்தை சுரண்டி உண்ணுவதால் நடுநரம்புக்கு இணையாக வெள்ளை நிற வரிகள் காணப்படும்.
- இலைத் திசுக்களின் ஊடே புழுக்கள் துளைப்பதால், இலை நரம்புகளுக்கு இணையாக ஒழுங்கற்ற கண்ணாடி போன்ற வெள்ளைநிறத் திட்டுக்கள் தோன்றும்.
- புழுக்கள் இலைகளைத் துளைத்து இலையின் நுனிகளில் கொப்புளங்களை ஏற்படுத்தும்.
- சேதம் ஏற்பட்ட இலைகள் வாடி விழுந்து விடும்.
- தீவிரத் தாக்குதலின்போது நெல் வயல் முழுவதும் எரிந்தது போன்று காட்சிதரும்.
|
|
பூச்சியின் விபரம்:
- முட்டை : பொதுவாக இலையின் நுனியை நோக்கி இளம் இலைகளின் சிறு பிளவு/வெடிப்புகளுக்குள் முட்டைகள் இடப்பட்டிருக்கும்.
- புழு : புழுக்கள் வெள்ளை கலந்த மஞ்சள் நிறத்தில், தட்டையாகக் காணப்படும். இலைகளை துளைத்து இலைத் திசுக்களை உண்டு, அதனுள்ளேயே கூட்டுப்புழுவாகிறது.
- முதிர்பூச்சி : வண்டுகள் சற்று சதுரமான வடிவத்தில் கருநீல நிறம் அல்லது கருப்பு நிறமான உடலுடன், உடல் முழுவதும் முள்ளுடன் 1/6" நீளமும், 1/8" அகலத்துடனும் காணப்படும்.
|
|
|
புழு |
முதிர் பூச்சி |
|
கட்டுப்பாடு:
- வயலில் அதிக உரமளிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
- நெருக்கமாக நடவு செய்வதை தவிர்க்கவேண்டும்.
- கொப்புளம் போன்ற துளைத்த இலை நுனிகளை அழிக்க வேண்டும்.
- வண்டுகளை கையால்(அ)கைவலைகள் கொண்டு சேகரித்து அழிக்க வேண்டும்.
- பூச்சிகள் முட்டையிடுதலைத் தடுப்பதற்காக, தண்டின் நுனிப்பகுதியினை வெட்டிவிட வேண்டும். தண்டுகளை கத்தரித்து, மண்ணுக்குள் புதைத்துவிட வேண்டும். இதனால் புழுக்களின் எண்ணிக்கையை 75-92% குறைக்கலாம்.
- கூர்மூக்கு நாவாய்ப்பூச்சிகள் வளர்ச்சியடைந்த வண்டுகளை உண்ணும்.
- மீத்தைல் பாரத்தியான் 0.05 % (அ) குயினைல்பாஸ் 0.05 % (அ) @ 1000 மிலி/எக்டர் என்ற அளவில் தெளிக்க வேண்டும்.
|
|
|
|
வண்டுகளை கைவலைகள் கொண்டு சேகரித்து அழிக்க வேண்டும் |
|