தாக்குதலின் அறிகுறிகள் :
- இலைகள் நுனி முதல் அடிப்பகுதி வரை முழுவதும் மஞ்சள் நிறமாக மாறிவிடும்.
- பயிரின் வீரியம் குறைந்து வளர்ச்சி குன்றி குட்டையாகக் காணப்படும்.
- பயிர் வாடுதல் அல்லது முற்றிலுமாக காய்தல். பயிரை முழுவதுமாக தாக்கி அதன் சாற்றை உறிஞ்சுதல்.
- இலையுறைகள் அல்லது நடுநரம்புகளுக்குள் வெள்ளையான அல்லது வெளிறிய மஞ்சள் நிறமான முட்டைகள் இருக்கும்.
- பயிரின் மேல்பகுதியில் வெளுத்த பச்சை நிற முதிர்ப்பூச்சிகள் இருக்கும்.
- இப்பூச்சிகள் துங்ரோ, நெல் மஞ்சள் குட்டை போன்ற வைரஸ் நோய்களைப் பரப்புகின்றன.
மஞ்சள் நிறமான இலைகள்
|
|
பூச்சியின் விபரம்:
- முட்டை :பச்சையான ஒளிகசியும் தன்மையுடைய முட்டைகள், இலைத்தாளின் நடுநரம்பு அல்லது நெற்பயிர் உறை அல்லது பச்சைப்புல் ஆகியவற்றில் இடப்பட்டிருக்கும். ஒரு வரிசையில் 10-15 குவியல்களாக முட்டைகள் இடப்பட்டிருக்கும்.
- இளம்பூச்சி :இளம் பூச்சிகள் மென்மையான உடலுடன் மஞ்சளான வெண்மை நிறத்தில் இருக்கும். படிப்படியாக இந்நிறம், பச்சையாக மாறி 5 இளம் பூச்சி வளர்ச்சி நிலைகளுடனும் காணப்படும். பின்பு 18-20 நாட்களில் முதிர் பூச்சிகள் உருவாகிறது.
- முதிர்ப்பூச்சி:இவை 3-5 மி.மீ நீளம் கொண்டு, பிரகாசமான பச்சை நிறத்தில் வேறுபட்ட கருப்பு நிற அடையாளங்களுடன், கூம்புப் பலகை வடிவில் சிறப்பான விட்டக்கோடு இயக்கத்துடன் காணப்படும். ஆண் பூச்சியின் முன் இறக்கையின் நடுப்பகுதியில் கருப்புநிற புள்ளி காணப்படும். ஆனால் பெண் இனப் பூச்சியில் அவை கிடையாது. ஜூலை-செப்டம்பர் மாதத்தில் பூச்சிகள் செயல்திறனுடன் விளங்கும்.பெண் இனப்பூச்சிகள் 50-55 நாட்கள் வரை வாழக் கூடியது.
|
கட்டுப்படுத்தும் முறை
- பச்சைத் தத்துப் பூச்சியை சிறப்பான முறையில் கட்டுப்படுத்துவதற்கு, பச்சைத் தத்துப்பூச்சி மற்றும் துங்ரோ நச்சுயிரி ஆகியவற்றை எதிர்க்கும் திறன் கொண்ட இரகங்களான ஐஆர் 50, ஐஆர் 54, ஐஆர் 64, சிஆர் 1009, பிஒய் 3, கோ 46, மற்றும் வெள்ளைப்பொன்னி ஆகிய இரகங்களைப் பயிரிடுதல்.
- முதிர்ச்சியடைந்த நாற்றுக்களை நடவு செய்வதன் மூலம் இலைத் தத்துப்பூச்சிகளால் பரப்பப்படும் நச்சுயிரிகளின் தாக்கத்தைக் குறைக்க முடிகிறது.
- அடிஉரமாக வேப்பம் பிண்ணாக்கு 12.5 கிலோவை நாற்றங்காலில் அளித்தால் பச்சை தத்துப் பூச்சியின் தாக்குதல்களைக் கட்டுப்படுத்தலாம்.
- பொருளாதார சேத நிலை அளவு : 60/25 வலை வீச்சுகள் (அ) 5/குத்து தழைப்பருவத்தில் (அ) பூத்தல் பருவத்தில் 10/குத்து (அ) துங்ரோ உட்பரவல் இடங்களில் 2/குத்து. வயலில் துங்ரோ மற்றும் பச்சைத் தத்துப்பூச்சிகள் இருப்பைக் கண்காணிக்க வேண்டும். நடவு செய்யப்பட்ட வயலின் குறுக்கில் பக்கவாட்டில் நடக்கும்போது 20 குத்துக்களைச் சரிபார்க்க வேண்டும்.
- பென்தியான் 500 மி.லி (அ) மோனோகுரோட்டாபாஸ் 1000 மி.லி (அ) பாஸ்போமிடான் 1000 மி.லி மருந்து இவற்றில் ஏதேனும் ஒன்றினைத் தெளித்து தத்துப்பூச்சியின் தாக்குதல்களைக் கட்டுப்படுத்தலாம்.
- ஸ்ட்ரெப்ஸிப்டீரன்ஸ், சிறு குளவிகள், மற்றும் நுாற் புழுக்கள் ஆகியவை தத்துப்பூச்சிகளின் இளம் குஞ்சுகள் மற்றும் முதிர் பூச்சிகளில் ஒட்டுண்ணியாகச் செயல்பட்டு அதனைக் கொன்றுவிடும்.
- மேலும் நீர்வாழ் நாவாய்ப்பூச்சிகள், ஊசித்தட்டான், தட்டான் பூச்சிகள், மற்றும் சிலந்திகள் ஆகிய பூச்சிகளாலும் பச்சைத் தத்துப்பூச்சி தாக்கப்படுகிறது. பூசண நோய்க் காரணிகள் பச்சைத் தத்துப்பூச்சியின் இளம் உயிரிகள் மற்றும் முதிர் பூச்சிகளைத் தாக்குகிறது.
- மிக அதிக அளவில் காணப்படும் கொன்றுண்ணி பச்சை நாவாய்ப்பூச்சி "(சிர்டோரினஸ் லிவிடிப்பென்னிஸ்). இவை முட்டைகள் மற்றும் இளங்குஞ்சுகளை வேட்டையாடிக் கொன்றுவிடும்.
- பச்சைத் தத்துப்பூச்சிகளின் எண்ணிக்கைகளைக் கண்டறிவதற்கு விளக்குப்பொறிகளை பயன்படுத்தலாம்.
- விளக்குப் பொறிகளை பயன்படுத்துவது பூச்சிகளை கட்டுப்படுத்துவதற்கான மிக சிக்கன முறையாகும்.
- அதிகாலை நேரத்தில் விளக்குப் பொறியை சுற்றி பூச்சிக்கொல்லி மருந்து தெளித்தோ அல்லது தூவியோ கவரப்பட்ட பச்சைத் தத்துப்பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்
|
|
|
|
சிஆர் 1009 போன்ற எதிர்ப்பு இரகங்களை பயிரிடவும் |
நாற்றங்காலில் வேப்பங்கட்டியை இடவும் |
விளக்குப் பொறி வைக்கவும் |
|