நெல் பயிரில் சரிவிகித உர மேலாண்மை

தொழு உரம்:

  • இவற்றின் முக்கியத்துவத்தை நாம் அனைவரும் அறிந்ததே கண்டிப்பாக ஏக்கருக்கு  நான்கு டன் வரை நன்கு மக்கிய தொழு உரத்தை இடவேண்டும்.
  • மண்புழு உரம் அல்லது கம்போஸ்ட் பயன்படுத்தும் போது இரண்டு டன் வரை இட வேண்டும்.
  • இவற்றை உயிர் உரங்களான அசோஸ்பைரிலும், பாஸ்போபாக்டீரியா, VAM மற்றும் தேவையின் அடிப்படையில் உயிர் பூச்சி மற்றும் பூஞ்சாண கொல்லிகளை பயன்படுத்தி ஊட்டமேற்றி இடுவதால் மண்ணில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் செடிகளுக்கு கிடைக்கப்பெறுகிறது.
  • மேலும் பல்வேறு வகையான நோய் மற்றும் பூச்சி தாக்குதலில் இருந்து பயிர்களை பாதுகாக்கிறது.

 

 

யூரியா:

  • நெல் பயிர்கள் காற்று இல்லாத சூழலில் வளர்வதால் அதன் வேர்கள் தழைச்சத்தை மண்ணில் இருந்து சிதைத்து எடுத்துக் கொள்ள நாட்கள் தேவைப்படுகிறது. அதனால்தான் பயிரின் ஆரம்ப நிலையில் நாம் தழைச்சத்து எளிதில் செடிகளுக்கு கிடைக்கக்கூடிய யூரியாவை பயன்படுத்துகிறோம்.
  • இதில் அதிக தழைச்சத்து கிடைக்கப்பெறுகிறது இதனால் செடியில் அதிக அளவில் உணவு உற்பத்தி மேற்கொண்டு வேகமாக வளர்கிறது.
  • யூரியா வடிவில் இடப்படும் தழைச்சத்துக்கள் எளிதில் மண்ணின் அடிப்பகுதிக்கு சென்றும் வெப்பநிலையால் ஆவியகியும் அதிக உர இழப்பீட்டை ஏற்படுத்துகிறது. எனவே தான் இதனை இரண்டு அல்லது மூன்று முறையாக பிரித்து கொஞ்சம் கொஞ்சமாக செடிகளுக்கு இட வேண்டும். 
  • அதிகமாக இடும் போது மண் தன்மையை பாதிப்பதுடன் நிலத்தடி நீரையும் பாதிப்படையை செய்கிறது. உற்பத்தி செலவு அதிகப்படுத்துகிறது நோய் மற்றும் பூச்சி தாக்குதலை அதிகப்படுத்துகிறது.

 

 

DAP:

  • நெல் பயிருக்கு தேவையான தழைச்சத்து மற்றும் மணிச்சத்து ஆகியவற்றை குறைந்த விலையில் செடிகளுக்கு எளிதில் கிடைக்கக்கூடிய வடிவில் கொடுக்க வேண்டும் என்றால் அதற்கு ஒரே தீர்வு டிஏபி தான்.
  • எனவேதான் இது நெல் உற்பத்தியில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அதிகமாக இதை பயன்படுத்தினால் நெல் வயலில் பாசி படிதல் மற்றும் தொடர்ச்சியாக இலைகள்  கருகுதலை காணலாம்.  
  • எனவே இதனை அடியுரமாக போதுமான அளவு பயன்படுத்துவதால் புதிய வெள்ளை வேர்களின் வளர்ச்சி, பச்சையத்தின் அளவை அதிகரித்தல் மற்றும் சீரான பயிர் வளர்ச்சி போன்ற பல நன்மைகளை காண முடியும்.
  • இதை பயன்படுத்துவதால் 20-25 சதவீதம் வரை மகசூல் அதிகரிப்பதை அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

 

 

அமோனியம் சல்பேட்:

  • அமோனியம் சல்பேட் இடுவதால் அதிக சேர் உள்ள இடங்கள் சற்று இறுகும். மேலும் இது மண்ணின் கார அமிலத்தன்மையை நடுநிலை படுத்தும். இதில் உள்ள அம்மோனியம் வடிவ தழைச்சத்து எளிதில் மண்ணிற்கு அடியில் சென்று அல்லது அதிக வெப்பத்தினால் ஆவியாக சென்று வீண் ஆகாது.
  • மேலும் இதில் உள்ள சல்பேட் ஊட்டச்சத்து புரத உற்பத்தியில் முக்கிய பங்கு வகிப்பதுடன் செடிகளால் எளிதில் எடுத்துக் கொள்ள வடிவில் உடனடியாக கிடைக்கிறது. இதனால் மற்ற ஊட்டச்சத்துகளும் செடிகளுக்கு எளிதில் கிடைக்கப்பெறுகிறது. 
  • நெல் மணிகளின் எடையை சற்று அதிகப்படுத்தும். இதுபோன்று பல காரணங்கள் இருக்கிறது. ஆனால் இதை அதிகமாக பயன்படுத்துவதும் ஆபத்தானது. அதிகமாக பயன்படுத்தும்போது மண்ணின் கார் அமிலத்தன்மை குறைக்கும் வல்லமை படைத்தது.

 

 

ஜிங்/துத்தநாக சல்பேட்:

  • ஜிங் எனப்படும் துத்தநாகம் நெல் பயிருக்கு மிகவும் இன்றி அமையாதாகும். இதன் குறைபாடு செடிகளின் ஆரம்ப நிலையிலேயே தெரியவரும் அதாவது நடவு செய்த 15 நாட்களிலேயே தெரியும்.
  • போதுமான வளர்ச்சி இன்மை, செடிகளின் அடி இலைகளில் அடர்த்தியாக சிகப்பு நிற ஒழுங்கற்ற புள்ளிகள், பின்னர் இந்த இலைகள் காய்தல் மற்றும் போதிய தூர்கள் வராமல் இருத்தல் போன்றவை இதன் குறைபாட்டின் பிரதான அறிகுறிகள்.
  • நெல் பயிருக்கு அதிகளவு துத்தநாகம் தேவைப்படுவதால் ஏக்கருக்கு 10 கிலோ அடி உரமாக இட வேண்டும்.

 

 

பொட்டாசியம் குளோரைடு:

  • திடமான தண்டு பகுதி, நல்ல வேர் வளர்ச்சி, மண்ணை இறுகச் செய்தல், அதிக தூர்கள் வெடிக்க மற்றும் மணி பிடித்தலை  மேம்படுத்தி மகசூல் அதிகரிக்க உதவுகிறது
  • தேவை அடிப்படையில் மட்டும் இதை பயன்படுத்தலாம். ஏக்கருக்கு இப்போது முதல் 40 கிலோ.

 

நுண்ணூட்டச் சத்துக்கள்:

  • மனிதர்களுக்கு தேவைப்படுவது போல செடிகளுக்கும் பல்வேறு நுண்ணூட்டச் சத்துக்கள் தேவைப்படுகிறது. இது மிக குறைந்த அளவே தேவைப்படுவதால் தனித்தனியாக இட வேண்டிய அவசியம் இல்லை அதனால் ஏக்கருக்கு 10 கிலோ நுண்ணூட்டம் அடி உரமாக இட்டால் போதும்.

 

 

ஒரு ஏக்கருக்கு பரிந்துரைக்கப்படும் உர அளவு:

  • தொழு உரம்- 3000-4000 கிலோ
  • டி ஏ பி - 40- 50 கிலோ
  • அமோனியம் சல்பேட்- 40 கிலோ
  • யூரியா- 100 கிலோ
  • 20:20:20/17:17:17/இதர காம்ப்ளக்ஸ் உரம்- 40-50 கிலோ
  • பொட்டாஸ்- 40- 50 கிலோ
  • துத்தநாகம் சல்பேட்- 10 கிலோ
  • நுண்ணூட்ட சத்துக்கள்- 5-10 கிலோ
 
மேற்கண்ட உரங்களை அடி உரமாகவும் மற்றும் முக்கிய தருணங்களிலும் இட வேண்டும். நெல் பயிரை பொருத்தவரை தூர்கள் வெடிக்கும் தருணம், கதிர்கள் தொண்டையில் இருக்கும் தருணம் மற்றும் மணிகள் பால் பிடிக்கும் தருணம் ஆகியவை உரம் இடுவதற்கு ஏற்ற காலங்கள்.