நில பண்படுத்துதல் - முன்னுரை

நில பண்படுத்துதல்

முன்னுரை

உழவு என்பது மண்ணின் பெளதீக குணங்களை உழவுக் கருவிகள் மூலம் சாதுர்யமாக கையாண்டு விதை முளைப்பு நாற்று வளர்ப்பு மற்றும் பயிர் / தாவர வளர்ச்சி போன்றவற்றிற்கு ஏற்ற சூழ்நிலையை உருவாக்குதல்.

  • காற்று பரிமாற்றத்திற்கு வழிவகுக்கிறது.
  • போதுமான விதை மண் தொடர்பினை ஏற்படுத்துவதன் மூலம் விதை மற்றும் நாற்றின் வேருக்குத் தேவையான நீரினை அனுமதிக்கிறது.
  • இறுக்கம் இல்லாத மண்ணில் நாற்று முளைத்து வளர்வதற்கு வழிவக்கும்.
  • அடர்வு குறைவான மண், வேர் வளர்ச்சி மற்றும் செல் பெருக்கத்திற்கு உதவுகிறது.
  • நாற்றிற்கு சூரியஒளி தரும் வகையிலான சூழ்நிலையை உருவாக்கும். (களைகளற்ற சூழ்நிலை)
  • பூச்சி மற்றும் நோய் கிருமிகளற்ற சூழ்நிலையை உருவாக்கும்.
  • இயற்கை எரு மற்றும செயற்கை உரம் மண்ணுடன் கலப்பதற்கு உதவுகிறது.
  • மண் இறுக்கத்ததை நீக்கி நீரை கிரகித்து மண் ஆழத்தை அதிகப்படுத்துகிறது