நெல் சாகுபடி - கால அட்டவணை (சராசரியாக 120 நாட்கள்)

இரகம் தேர்வு செய்தல்

•தங்களது பகுதிகளில் பிரதானமாக சாகுபடி செய்யப்படும் இரகம்

இதனால் சாகுபடி தொழில் நுட்பங்களை எளிதில் தெரிந்து கொள்ளலாம். நோய் மற்றும் பூச்சி தாக்குதலின் தீவிரம் குறைவாக காணப்படும்.

விளை பொருட்களை எளிதில் விற்பனை செய்ய இயலும் மற்றும் நல்ல விலை கிடைக்கும்.

விதை தேர்வு

• இரகத்தினை பொறுத்து மாறுப்படும்.

உதராணத்திற்கு - மேம்படுத்தப்பட்ட இரகம் வீரிய ஒட்டு இரகம் (10-15 கிலோ/ஏக்கருக்கு), நடுத்தர மற்றும் அதிக வாழ்நாள் இரகம் (30-40 கிலோ) பாரம்பரிய இரகம் (50-60 கிலோ)

தேர்வு செய்யப்பட்ட இரகங்களில் கிடைக்கப் பெறும்  Foundation Seeds எனப்படும் ஆதார விதை 1 அல்லது ஆதார விதை 2 பயன்படுத்துவது சிறந்தது.

ஏனெனில் இதில் அதிக முளைப்பு திறன், ஒருமித்த பயிர் வளர்ச்சி, இனத்தூய்மை மற்றும் பல நன்மைகள் உள்ளது. இதன் விதைகள் வெள்ளை அட்டையால் அங்கீகாரம் செய்திருக்கும்.

ஆதார விதைகள் கிடைக்கப்பெறாத பட்சத்தில்   சான்றளிக்கப்பட்ட விதைகளை (Certified seeds) பயன்படுத்தலாம் இது நீல நிற அட்டையால் அங்கீகரிக்கப்பட்டிருக்கும்.

விதை நேர்த்தி

•பெறப்பட்ட விதைகளை மிதமான காலை/மாலை வெப்பநிலையில் சுமார் 10-15 நிமிடம் உலர வைத்து பயன்படுத்த வேண்டும்.

இதனை தேவையான அளவு நீரில் கொட்டி மிதக்கும் தரமற்ற விதைகளை அப்புறப்படுத்த வேண்டும்.

மீதமுள்ள தரமான விதைகளை சாக்கு/கோணி பையில் கொட்டி சுமார் 12 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

பிறகு 6 முதல் 8 மணி நேரம் வெளிச்சம் இல்லாத பகுதிகளில் வைத்திருக்கும் போது முளைப்பு திறன் காணப்படும்.

விதை நேர்த்தி செய்ய விரும்பினால் நெல்லின் அளவை பொறுத்து தேவையான அளவு அரிசி கஞ்சியுடன் ஏக்கருக்கு தலா 200 கிராம் அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா மற்றும் சூடோமோனஸ் ஆகியவற்றை அரிசி கஞ்சியுடன் கலந்து விதை நேர்த்தி செய்து சுமார் 15-30 நிமிடம் வரை உலர வைத்து பின்பு விதைக்கலாம்.

மேற்கண்ட முறையை நெல் விதைகளை முளைப்பு விடுவதற்கு முன்பும் பின்பற்றலாம் அவ்வாறு இருப்பின் நேர்த்தி செய்த விதைகளை சுமார் 8-12 மணி நேரம் உலர்த்தி விதைக்கலாம்.

இராசாயன பூஞ்சான கொல்லிகளை பயன்படுத்தியும் விதை நேர்த்தி செய்யலாம். இதற்கு 1 கிலோ நெல் விதைக்கு 2 கிராம் கார்பென்டாசிம் என்ற வீதம் கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும்.

நாற்றாங்கால் பண்ணை அமைத்தல்

•நல்ல மண் வசதி மற்றும் நீர் பிடிப்பு திறனுடைய இடத்தை தேர்வு செய்து நாற்றங்கால் பண்ணை அமைக்கலாம்.

• 1 ஏக்கர் சாகுபடிக்கு சுமார் 7-8 சென்ட் நிலப்பரப்பு, நாற்றங்கால் அமைக்க தேவை.

நாற்றங்கால் பகுதிக்கு தேவையான அடி உரங்களான தொழு உரம் 200-250 கிலோ, 5-10 கிலோ வேப்பம் புண்ணாக்கு, 5-7 கிலோ DAP, 1 கிலோ கடல் பாசி/ஹியூமிக் குருணை மற்றும் 300 கிராம் VAM ஆகியவற்றை இட்டு தேவையான அளவு நீர் பாய்ச்சி நாற்றங்காலை தயார் செய்ய வேண்டும்.

இதில் தேவையான அளவு நீளம் மற்றும் 1.5 மீட்டர் அகலமுடைய சேற்று மேட்டு பாத்தி (நிலத்திலிருந்து சுமார் 1inch உயரத்திற்கு) அமைக்க வேண்டும்.

இதில் தயார் செய்து முளைப்பு வந்திருக்கும் விதைகளை பரவலாக விதைக்க வேண்டும். இதில்; 5 மில்லி மீட்டர் உயரத்திற்கு நீர் பாய்ச்சி அதனை காய்ந்த வைக்கோல் அல்லது துணிகள் பயன்படுத்தி மூடி வைப்பதால் நல்ல முளைப்பு திறன் காணப்படும் மற்றும் வெயில் தாக்கத்தினால் நாற்றுகள் கருகாது.

நாற்றுகளின் வளர்ச்சிக்கு ஏற்ப படிப்படியாக நீரின் அளவை அதிகப்படுத்தவும்.

நோய் மற்றும் பூச்சி தாக்குதல்

 

வேர்களில் புழு அல்லது பேன்: வளர்ச்சியின்மை, திட்டு திட்டாக மஞ்சள் நிறமாக மாறுதல்நாற்றுகள் இறத்தல் - 1 கிலோ Fibronil குருணை இடவும்.

வேர் அழுகல் இலைப்புள்ளி /குலைநோய்: சூடோமோனாஸ் மற்றும் டிரைகோடெர்மா ஆகியவற்றை இலை வழியாகவும் நீர் மூலமாகவும் கொடுக்கலாம்.

புழுக்கள் மற்றும் சாறுண்ணி பூச்சிகள்: வேப்ப எண்ணெய்/வேப்பங்கொட்டைவிதை கரைசல்/பிவேரியா/ வெர்டிசீலியம் தெளிக்கலாம்.

களை கட்டுப்பாடு:

விதைப்புக்கு முன் அல்லது விதைத்த 3 நாட்களுக்குள் களை கொல்லி பயன்படுத்தலாம்.

முடிந்த வரை இராசாயணக் களைகொல்லி பயன்படுத்தாமல் அவ்வப்பொழுது நாற்றுகளில் காணப்படும் களைகளை கையால் அகற்றவும்.

நடவு வயல் தயார் செய்தல்

•நிலத்தை 2 முறை எதிர்எதிர் திசையில் உழவு செய்யவும்.

பசுந்தாள் உரம் மடக்கி உழுதிருந்தால் தொழு உரம் அளவை பாதியாக குறைத்து கொள்ளலாம்.

அடி உரம்: மக்கிய தொழு உரம் 4 டன்/ஏக்கர் அல்லது 2 டன் மண்புழு உரம்/கம்போஸ்ட் உடன் தலா 2 கிலோ அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா மற்றும் 4 கிலோ VAM ஆகியவற்றை பயன்படுத்தி சுமார் 15 நாட்கள் ஊட்டமேற்றி இடவும்.

தேவையின் அடிப்படையில் இதனுடன் உயிர் உரம்/பூச்சி/பூஞ்சான கொல்லியை பயன்படுத்தலாம்.

நிலத்திற்கு நீர்பாய்ச்சி சேர் உழவு செய்து மட்டம் செய்ய வேண்டும்.

•40-50 கிலோ தழைச்சத்து, 110-130 கிலோ மணிச்சத்து, 20-25 கிலோ சாம்பல் சத்து, நுண்ணூட்ட கலவை 5-10 கிலோ, ஜிங்க் சல்பேட் 10 கிலோ ஆகியவற்றை அடி உரமாக இட வேண்டும்.

தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து உரங்களை 18:46:00 (DAP), 20:20:00:13 (Factomphos), Rock Phosphate அல்லது ஏதேனும் கலப்பு உரம் பயன்படுத்தி கொடுக்க வேண்டும்.

இதில் எந்தெந்த உரங்களை எவ்வளவு இடலாம் என்று தங்களது பகுதிகளில் கிடைக்கப்பெறும் உரத்தினை பொறுத்து தேர்வு செய்யவும்.

0 நாள்

ரகத்தினை பொறுத்து 18-35 நாட்கள் வயதுடைய நாற்றுகளை (சரியான தருணம் 4 இலை உடைய பயிர்கள்) பிடிங்கி தயார் நிலையில் வைக்கவும்.

1-ம் நாள்

ரகத்தினை பொறுத்து 3-8 பயிர்கள் நடவு வயலில் சுமார் 1.5 inch ஆழத்தில் நடவு செய்யவும். இரண்டு வரிசைக்கு இடைப்பட்ட இடைவெளி நில அமைப்பு, தட்பவெப்ப சூழ்நிலை மற்றும் ரகத்தை பொறுத்து 15-20 cm இடைவெளி இடவும்.

3-5 ம் நாள்

•களைகள் முளைப்பதற்கு முன்னால் தெளிக்க கூடிய களை கொல்லிக்கு கீழ்க்கண்டவற்றில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தவும்

1.Pertilachlor 37% - 600மி /ஏக்கருக்கு

2.Butachlor       - 500 கிராம் /ஏக்கருக்கு

3. Pertilachlor     - 600மி /ஏக்கருக்கு +

                  Metsulfuron methyl + Chlorimuron ethyl –    கிராம்/ஏக்கருக்கு

4.Bensulfuron Methly +Pertilachlor – கிலோ/ஏக்கருக்கு

மேற்கண்ட களை கொல்லிகள் தவிர பல்வேறு வகையான மருந்துகள் கிடைக்கப்பெறுகிறது. பயன்படுத்து முன் நமது வயலின் தன்மை, தட்பவெப்ப சூழ்நிலை மற்றும் களைகளை பொறுத்து தேர்வு செய்து பயன்படுத்தவும்.

பயன்படுத்தும் முறையை தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும்.

7-8 ம் நாள்

நடவு செய்யப்பட்ட வயலில்  இறந்த செடிகள்/விடுப்பட்ட இடம் /இதர சேதங்களால் ஏற்பட்ட பயிர் இழப்பீட்டை  பூர்த்தி செய்ய இடை நடவு மேற்கொள்ளவும்.

15-20 ம் நாள்

 மேலே கூறிய வழிமுறைகளை பின்பற்றும் போது செடிகளில் போதுமான தூர்கள் கண்டிப்பாக காணப்படும்.

• தவறும் பட்சத்தில் நிலத்தை காயவிட்டு 10 லி தண்ணீருக்கு கீழ்க்கண்ட மருந்துகளை கலந்து தெளிக்க வேண்டும். (Profenophos/Quinalphos – 25ml + jivagro/Paushak-25ml+ALL 19-30 gram)

20-25 ம் நாள் (தூர்கள் வெடிக்கும் தருணம்)

•களைகள் ஏதேனும் தென்பட்டால் கை களை எடுக்கலாம் அல்லது கோனோ வீடர் பயன்படுத்தி களைகளை அகற்றலாம்.

நடவு செய்த 3 முதல் 5 நாட்களில் களை கொல்லிகள் பயன்படுத்தவில்லை என்றால் கீழ்க்கண்ட களை கொல்லிகளை ஏதேனும் ஒன்றை பயன்படுத்தலாம்.

1.Bispyribac sodium – 100-150கிலோ/ஏக்கருக்கு

2.Florpyrauxifen benzyl+ Cyhalofop butyl– 500 மி/ஏக்கருக்கு

3.Triafamone + Ethoxysulfurol - 60-80கிராம்/ஏக்கருக்கு

30-35 ம் நாள்

 25 கிலோ தழைச்சத்து, 15-25 கிலோ மணிச்சத்து மற்றும் 15-20 கிலோ சாம்பல் சத்து கொடுக்க வேண்டும்.

இத்தருணத்தில் குருத்து பூச்சி, இலை சுருட்டு புழு, ஆணைக் கொம்பன் மற்றும் தாள் பூச்சி அதிகம் தென்பட வாய்ப்புள்ளது.

இதனை கட்டுப்படுத்த Cartap hydrochloride /Fibronil /Flubendiamide /Chlorantraniliprole ஏதேனும் ஒன்றை தேவையான அளவு பயன்படுத்தவும்.

நோய்யை பொறுத்த வரை இலைப்புள்ளிகுலை நோய் மற்றும் கருகல் நோய் தென்பட வாய்ப்புள்ளது. Carbendazim/Azoxystrobin+Mancozeb/tricyclazole/Tebuconazole+Tricylostrobin நோயினை பொறுத்து ஏதேனும் ஒன்றை பயன்படுத்தலாம்.

40-45 ம் நாள் (கருதுகள் தொண்டையில் இருக்கும் தருணம்)

குருத்து மற்றும் தாள் பூச்சிகளின் தாய் அந்து பூச்சிகள் அதிகம் வயலில் இருக்கும் தருணத்தில் விளக்கு பொறி மற்றும் மஞ்சள் ஒட்டு அட்டைகளை  பயன்படுத்தலாம். அதிகமாக காணப்பட்டால் ஏக்கருக்கு 4 கிலோ Fibronil அல்லது Cartap hydrochloride SG குருணை இடவும்.

45-50 ம் நாள்

•பயிர்கள் போதுமான அளவு வளர்ந்து பூக்கள் வரும் தருணத்தில் வளர்ச்சி ஊக்கி மற்றும் தேவையான நோய்/பூச்சிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதனால் ஒருமித்த பூ பிடித்தல் மற்றும் கதிர்கள் வருவதை காணலாம்.

55-65 ம் நாள் (மணிகள் பால் பிடிக்கும் தருணம்)

25 கிலோ தழைச்சத்து> 10-20 கிலோ சாம்பல் சத்து மற்றும் தேவையான அளவு சல்பேட்

இத்தருணத்தில் கீழ்க்கண்ட நோய்கள் மற்றும் பூச்சிகள் காணப்படும்.

1. தண்டு துளைப்பான் – Cartap hydrochloride -150-250 கிராம்/ஏக்கர்

2. புகையான்            - Pymetrazine 80-100 கிராம்/ஏக்கர்

3. கதிர் நாவாய் பூச்சி     - Malathion – 300-400 மிலி/ஏக்கர்

4. பாக்டீரியா இலைக்கருகல் – Stroptomycin -10 கிராம்/ஏக்கர்

5. மஞ்சள் கரிப்பூட்டை     - Propiconozole 100 மிலி/ஏக்கர்

80-90  ம் நாள்

செடிகளில் உள்ள கதிர்கள் முதிர்ச்சி அடையும் தருணம்.

75-85 ம் நாள்

பயிர் அறுவடை மற்றும் அறுவடை பின்சார் பணிகள்.