நெற்பயிரில் மஞ்சள் கரிப்பூட்டை நோய் எவ்வாறு கட்டுப்படுத்தலாம்...

எதனால் ஏற்படுகிறது:

   இது ஒரு பூஞ்சான நோய். பருவத்திற்கு பின் நடவு செய்யப்பட்ட பயிர்கள், அதிக தழைச்சத்து கொண்ட மண்,அதிக காற்றின் ஈரப்பதம், அடிக்கடி மழைப்பொழிவு மற்றும் சராசரி வெப்பநிலை இந்நோய் தாக்குதலுக்கு உகந்த சூழ்நிலைகள் ஆகும்.  நெற் பயிரின் அனைத்து வளர்ச்சி நிலைகளிலும் காணப்பட்டாலும்.

அறிகுறிகள் நெல் மணிகளில் பால் பிடிக்கும் தருணத்தில் மட்டும் தென்படுகிறது. இந்நோயின் மூலம் 25-75% வரை மகசூல் இழப்பு ஏற்படும்.

 

அறிகுறிகள்:

  1. நெல் மணிகளில்  1cm அகலத்தில் மென்மையான மஞ்சள் நிற பந்து போன்ற அமைப்பு காணப்படும்.

  2. இந்த வெல்வெட் போன்ற பந்துகள் நாளடைவில் மஞ்சள் கலந்த பச்சை அல்லது பச்சை கலந்த கருப்பு நிறத்தில் மாறுகிறது.

  3. நெற் கதிர்களின் ஒரு சில மணிகளில் மட்டும் இவ்வகை பூஞ்சானத்தின் அறிகுறிகள் தென்படும்.

  4. நெல் மணிகளில் நிறமாற்றம், எடை குறைவு மற்றும் முளைப்பு திறன் பாதிப்படைதல்.

 

கட்டுப்படுத்தும் வழிமுறைகள்:

  1. தரமான மற்றும் சான்றிதழ் பெற்ற விதைகளை தேர்வு செய்து பயிரிடலாம்.

  2. நோய் எதிர்ப்பு திறன் கொண்ட ரகங்களை தேர்வு செய்து பயிர் செய்யவும். (improved samba, swarna samba மற்றும் BPT 5204)

  3. சரியான பருவத்தில் அல்லது பருவத்திற்கு முன் நடவு மேற்கொள்ளுதல்.

  4. Trichoderma viridae + Pseudomonas fluorescene கொண்டு விதை அல்லது நாற்றுகளை நேர்த்தி செய்து நட வேண்டும்.

  5. பரிந்துரைக்கப்பட்ட தழைச்சத்து உரத்தினை மட்டும் இரண்டு அல்லது மூன்று முறையாக பிரித்து இட வேண்டும்.

  6. காய்ச்சலும் பாய்ச்சலுமாக  நீர் பாய்ச்ச வேண்டும்.

  7. களைகள் மற்றும் இதர குப்பைகள் இன்றி நிலத்தை பராமரிக்கவும்.

  8. அறுவடைக்குப் பின் வயலை ஆழமாக உழுது சூரிய ஒளியில் உலர வைப்பதால் மண்ணில் உள்ள பூஞ்சனங்களை அழிக்கலாம்.

  9. விதைகளை 52 டிகிரி வெப்ப நிலையில் 10 நிமிடங்கள் உலர வைத்து  பின்பு நாற்று விடவும்.

  10. CO 43, ADT 38, ADT 39 போன்ற ரகங்கள் இந்நோய் தாக்குதலுக்கு உகந்தது

  11. கீழ்க்கண்ட பூஞ்சாணக் கொல்லிகளில்  ஏதேனும் இரண்டினை சுழற்சி முறையில் தெளிக்கலாம்.

1. Copper hydroxide -1 g per litre

2. Tebuconazole + Trifloxystrobin - 1 g per litre water 

3. Fluopyram+Tebuconazole -1ml lit water

4 Hexaconazole - 1 ml per lit

5. Chlorothalonil- 2.5 g per lit water

6. Metiram+ Pyroclostrobin - 2 g per litre 

7. Azoxystrobin+ Diffenacozole - 1 ml per lit water