தண்டுத் துளைப்பான்

பயிர் :நெல்

1. நாற்றங்கால் பூச்சிகள்

2. நடவு வயல் பூச்சிகள்

 

2. நடவு வயல் பூச்சிகள்

1. தண்டுத் துளைப்பான்: சிர்போபேகா இன்ஸெர்டுலஸ்

அறிகுறிகள்:

  • இலையின் நுனியில் பழுப்பு நிற முட்டைக் கூட்டம் காணப்படும்.
  • தழைப்பருவத்தில் புழுக்கள் தண்டுகளில் நுழைந்து வளரும் தண்டுகளை உட்கொள்வதால் அதன் நடுப்பகுதி காய்ந்துவிடுகிறது. இதுவே "குருத்து காய்தல்" எனப்படுகிறது.
  • நன்கு வளர்ச்சியடைந்த பயிரில் முழு தானியக் கதிர்களும் காய்ந்துவிடும். மிஞ்சியிருக்கும் தட்டையான தானியங்களே "வெண்கதிர்" எனப்படுகிறது.
  • குருத்தைப் பிடித்து இழுக்கும் போது அவை எளிதாக கையோடு வந்துவிடும்.
  • பழுப்பு நிற அந்துப்பூச்சிகள் வயலில் இருக்கும்.
காய்ந்த நடுக்குருத்து வெண்கதிர்

பூச்சியின் விபரம்:

  • முட்டை : முட்டைகள் பாலேடு போன்ற வெள்ளை நிறமாகவும் தட்டையாகவும், முட்டை வடிவத்திலும் இருக்கும். இவை கூட்டமான திரளாக இடப்பட்டு வெளிர் மஞ்சள் நிற இழைகளால் மூடப்பட்டிருக்கும். இவை பெரும்பாலும் இலைகளின் நுனிப் பகுதிக்கருகே வைக்கப் பட்டிருக்கும். முட்டை கால அளவு 5-8 நாட்கள்.
  • புழு: வெளிரிய மஞ்சள் நிறத்தில் கரும்பழுப்பு நிற தலை கொண்டு அதில் முன் மார்புக் கவசத்துடன் காணப்படும். புழுக்கள் கால அளவு 28-30 நாட்கள்.
  • கூட்டுப்புழு : வெள்ளை நிற கூண்டுப்புழுவாதலால் நெற்பயிர் தண்டுகளுக்குள்ளே ஏற்படும், அல்லது வைக்கோல் மற்றும் பயிர்த் துார்களின் உள்ளேயும் ஏற்படும். கூட்டுப்புழு காலம் 8-10 நாட்கள் மட்டுமே.
  • முதிர் பூச்சி :
    பெண் அந்துப்பூச்சி :
     முன் இறக்கைகளின் நடுப்பகுதி நன்கு பிரகாசமான மஞ்சளான பழுப்பு நிறத்தில் கருப்பு நிறப் புள்ளிகளுடன் காணப்படும். மேலும் அதன் மலப்புழைப் பகுதியில் மஞ்சள் நிற மயிர்கற்றை இருக்கும்.
    ஆண் அந்துப்பூச்சி :சிறிய மற்றும் வெளிரிய மஞ்சள் நிற முன் இறக்கைகளைக் கொண்டிருக்கும். இதில் கருப்புப் புள்ளிகள் இருக்காது.
 
சில்லோ பாலிக்ரைசிஸ்
புழு  
முதிர்பூச்சி
சில்லோ சப்ரசாலிஸ்
புழு 
முதிர் பூச்சி
சிர்போபேகா இன்ஸெர்டுலஸ் 
புழு முதிர் பூச்சி
செசாமியா  இன்பிரென்ஸ்
புழு  
முதிர் பூச்சி

கட்டுப்பாடு:

  • தண்டு துளைப்பான் எதிர்க்கும் திறன் கொண்ட இரகங்களான ரத்னா, டிகேஎம் 6, ஐஆர் 20, ஐஆர் 40, ஐஆர் 56, ஏடிடீ 47, ஏடிடீ 48, ஏஎஸ்டி 20, ஐஆர் 36, ஏடிடீ 44, பிஒய் 4, ஏடிடீ 46, மது, காஞ்சனா, சுவர்ணபிரபா, கார்த்திகா, தீப்தி, மற்றும் டெல்லஹம்ஸா ஆகிய இரகங்களை பயிரிட வேண்டும்.
  • நாற்றுக்களை நெருக்கமாக நடுதலைத் தவிர்க்க வேண்டும்.
  • தொடர்ச்சியாக வயலில் நீர் தேங்குவதைத் தவிர்க்க வேண்டும்.
  • பாதிக்கப்பட்ட கதிர்களை பிடுங்கி அகற்றிட வேண்டும்.
  • விளக்குப் பொறி அமைத்து அந்துப் பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம்.
  • அறுவடை செய்த உடனே நிலத்தை நன்கு உழுது விட வேண்டும்.
  • பொருளாதார சேத அளவு : 2 முட்டை திரள்கள்/மீ (அ) தழைப் பருவத்தில் 10 சதவிகிதம் துார் அழுகல் நோய் (அ) பூத்தல் பருவத்தில் 2 சதவிகிதம் வெண்கதிர் நோய்.
  • முட்டை ஒட்டுண்ணிகளான டிரைக்கோடெர்மா ஜப்பானிக்கம் எக்டருக்கு 5 மி.லி வீதம் இரண்டு முறை நாற்றங்காலில் தெளிக்க வேண்டும்.
  • பேசில்லஸ் துருன்ஜெனிஸிஸ் வகை குர்ஸ்டாக்கி மற்றும் வேப்பங்கொட்டை சாற்றை தெளிக்க வேண்டும்.

பின்வரும் பூச்சிக் கொல்லிகளில் ஏதேனும் ஒன்றைத் தெளிக்கலாம்:

மோனோகுரோட்டாபாஸ் 36 எஸ்.எல் 1000 மி.லி / ஹெக்
குயினல்பாஸ் 25 இ.சி 1000 மி.லி / ஹெக்
பாஸ்போமிடான் 40 எஸ்.எல் 600 மி.லி / ஹெக்
ப்ரோபெனோபாஸ் 50 இ.சி 1000 மி.லி / ஹெக்

 

எதிர்ப்பு இரகம் ஏடிடீ 47 டிரைக்கோகிராமா முட்டை அட்டை டிரைக்கோகிராமா ஜப்பானிக்கம்