கம்பளிப்புழு

7. கம்பளிப்புழு: ஸாலிஸ் பென்னாடுலா

அறிகுறிகள்:

  • புழுக்கள் இரவு நேரத்திற்குள் நாற்றங்காலில் உள்ள பயிர்கள் முழுவதையும் உண்டு விடும்.
  • நெற்பயிரின் இலை விளிம்புகளை புழுக்கள் கடித்து உண்ணும்.
  • இலைகளை ஒழுங்கற்ற முறையில் ஓரத்திலிருந்து நுனி வரை கடித்து உண்ணும்.
  • நாற்றுக்களை ஒழுங்கற்றவாறு உண்டுவிடும்.
  • இலை நரம்பை தவிர பயிர்கள் முழுவதையும் கடித்து உண்டுவிடும்.

 

புழுக்கள் இலைகளை ஓரத்திலிருந்து நுனி வரை கடித்து உண்ணும் புழுக்கள் இலை நரம்பை தவிர பயிர்கள் முழுவதையும் கடித்து உண்டுவிடும்

பூச்சியின் விபரம்:

  • முட்டை : இலைகளின் மீது கொத்தாக மஞ்சள் நிற முடிகளுடன் கூடிய முட்டைகளை இடும்.
  • புழு : புழுக்கள் மஞ்சள் நிறத்தில் சிவப்பு நிற வரிகளுடன், ஆரஞ்சு நிற தலையுடன் காணப்படும். உடல் முழுவதும் உரோமங்கள் இருக்கும். இதில் நுனிப்பகுதியில் இரண்டும், பின்பகுதியில் இரண்டும் தெளிவாக தெரியும்.
  • கூட்டுப்புழு : மஞ்சள் நிற பட்டு போன்ற கூட்டுடன் இலையின் மீதிருக்கும்.
  • முதிர்பூச்சி : அந்துப்பூச்சிகள் இளம் மஞ்சள் நிறத்தில் இரு உணர் கொம்புகளுடன் காணப்படும்.
கம்பளிப்புழு முதிர்பூச்சி

கட்டுப்பாடு:

  • நாற்றங்காலில் நீர் பாய்ச்சுவதால் மறைந்திருக்கும் புழு மற்றும் முட்டைகள் மண்ணின் மேற்பரப்பிற்கு வருகின்றன். அவற்றை பறவைகள் கொத்தி உண்ணும்.
  • அறுவடைக்கு பின்னர் நிலத்தில் நீரை தேக்கி வைத்தல், வரப்புகளை சீர் செய்தல், வரப்புகள்/பாத்திகளை சுத்தம் செய்வதால் புழுக்களை இலைபரப்பிலிருந்து அகற்றலாம்.
  • நாற்றங்காலிலிருந்து நீரை வடித்து விட்டு, குளோர்பைரிபாஸ் 20 இ.சி. 80 மி.லி. (அ) மோனோகுரோட்டோபாஸ் 36 டபல்யு.எஸ்.சி 500மி.லி./எக்டர் என்ற அளவில் மாலை வேளைகளில் தெளிக்கவேண்டும்.
  • பறவைகள் (நாரை), வெளவால், வயல் எலிகள், சுண்டெலி, காட்டுப் பன்றிகள், நாய்கள், மரவட்டை உயிரிகள், மீன்கள், நீர்-நில வாழ்விகள், ஊர்வன மற்றும் குரங்குகள் புழுக்களை இரையாக உட்கொள்கின்றன.