கதிர் நாவாய்ப்பூச்சி

15. கதிர் நாவாய்ப்பூச்சி: லெப்டோகெரரிசா அக்யூட்டா

தாக்குதலின் அறிகுறிகள்:

  • பால் பருவத்திலிருக்கும் நெல் மணிகளிலிருந்து சாறு உறிஞ்சப்படும்.
  • நெல் மணிகளில் சாறு உறிஞ்சப்பட்டதால் பழுப்பு நிற திட்டுகளுடன் உமிகள் காணப்படும்.
  • நெல்மணிகள் விதையற்று பதராக மாறி நிமிர்ந்த பூங்கொத்துக்களைக் கொண்டிருக்கும்.
  • நெல் மணிகளில் பூச்சி உட்கொண்டு துளைகளில் கருப்பு நிறப் புள்ளிகள் காணப்படும்.
  • தீவிர பூச்சித் தாக்குதலின் போது முழு தானியக் கதிரும் தாக்கப்பட்டு நெல்மணிகள் முதிர்ச்சியடையாமல் போய்விடும்.
  • பால் பருவத்தின் போது நெல்வயலில், நாவாய்ப்பூச்சிகளின் வெறுக்கத்தக்க ஒரு மணம் வீசும்.
  • நாவாய்ப் பூச்சிகளை களைப்பதன் மூலம் வெறுக்கத்தக்க ஒரு மணம் வெளிவரும்.
பாதிக்கப்பட்ட நெல் மணிகள் தானிய மணிகளின் மீது கடித்த காயங்களும் புள்ளிகளும் காணப்படும்

பூச்சியின் அடையாளம் :

  • முட்டை : முட்டைகள் வட்டமாக பழுப்பு நிற விதை போன்று, 2 மி.மீ நீளம் கொண்டு இரு வரிசைகளில் கூட்டமாக வைக்கப்பட்டிருக்கும். இலைத்தாளின் மேல்பரப்பில் உள்ள இலை நடுநரம்பு பகுதியில் முட்டைகள் இடப்பட்டிருக்கும்.
  • இளம் பூச்சிகள் : முதல் வளர்நிலை பூச்சிகள் மிகவும் சிறியதாக, 2 மி.மீ நீளம் கொண்டு, வெளிறிய பச்சை நிறமாக இருக்கும். பின் அடுத்தடுத்த வளர்ச்சி நிலைகளில் ஆழ் பச்சை (கரும்பச்சை) நிறமாக மாறிவிடும்.
  • முதிர்ப்பூச்சிகள் : முதிர்ச்சி நிலையை அடைந்த பூச்சிகள் பச்சையான மஞ்சள் நிறமாகவும், நீளமாக மெலிந்தும் ½ அங்குலம் நீளமுடன் நாவாய்ப்பூச்சிக்குரிய வெறுக்கத்தக்க ஒரு மணமுடன் இருக்கும்.
  • வாழ்வுகாலம் : 3-4 மாதங்களுக்கு வாழக்கூடியவை.

 

பால் பருவத்திலிருக்கும் நெல் மணிகளிலிருந்து சாறு உறிஞ்சப்படகிறது

கட்டுப்படுத்தும் முறை:

  • வயல் நிலங்கள் மற்றும் வரப்புகள், பாத்திகள் ஆகியவற்றை களைச்செடிகள் மற்றும் புல்வகைகள் இல்லாதவாறு வைக்க வேண்டும்.
  • வலை மூலமாக அல்லது கைகளால் நாவாய்ப்பூச்சிகள் சேகரிப்பதன் மூலம் அதன் எண்ணிக்கையைக் குறைக்கலாம்.
  • கவர்ச்சிப் பொருள்களான அரசன் அல்லது இறந்து போன நத்தைகள் அல்லது எலிகள் போன்று துர்நாற்றம் கொண்ட ஏதாவது ஒன்றைப் பயன்படுத்தி, நெல்வயலிலிருக்கும் நாவாய்ப்பூச்சிகளைப் பிடிக்க வேண்டும்.
  • பொருளாதார சேத நிலை அளவு : பூத்தல் பருவத்தின் போது 5 நாவாய்ப்பூச்சிகள்/ 100 நெற்கதிர்கள் மற்றும் பால்பிடிக்கும் பருவத்திலிருந்து தானியமணி முதிர்ச்சி நிலைப் பருவம் வரை 16 நாவாய்ப்பூச்சிகள்/100 நெற்கதிர்கள்.
  • குறிப்பு : நாவாய்ப்பூச்சியின் தாக்குதல் பூத்தல் பருவத்தில் ஏற்படுவதால், பூச்சிக்கொல்லிகளின் அளிப்பை காலை 9 மணிக்கு முன்னர் அல்லது பகல் 3 மணிக்குப் பின்னர் அளிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் பூக்கள் கருவுறுதலில் எவ்வித பாதிப்பும் இன்றி செயல்படும்.
  • கே.கே.எம் – ல் 10% அக்கோரஸ் காலாமஸ் வேர் கிழங்கு பொடி + 90% சாம்பல் கலந்து தூவ வேண்டும்
  • பென்தியான் 100 இ.சி 500 மி.லி / ஹெக் ல் மாலத்தியான் 50 இ.சி 500 மி.லி / ஹெக்
  • வேப்பங்கொட்டை சாறு 5% 25 கிலோ / ஹெக் அல்லது நாட்சி (அ) ப்ரோஸிப்ஸ் இலை சாறு 10%
  • பென்தியான் 500 மலி (அ) மோனோகுரோட்டபாஸ் 500 மிலி அல்லது மாலத்தியான் 500 மிலி மருந்தை தண்ணீருடன் கலந்து தெளிக்கவும்.
  • உயிரியல் கட்டுப்பாட்டுச் செயல்களில் சிறு குளவி வகைகள் முட்டைகளில் மேல் ஒட்டுண்ணியாகச் செயல்பட்டு அதனை உட்கொள்கிறது.
  • மேலும் கதிர்நாவாய்ப்பூச்சிகளின் இளங்குஞ்சுகள், மற்றும் முதிர்ப்பூச்சிகளை சிலந்திகள், தரைவண்டுகள், மற்றும் தட்டான் பூச்சிகள் இரையாக உட்கொள்கின்றன.
  • தாவரச்சாறுகளை பயன்படுத்துதல் : வேப்பங்கொட்டையின் சாறு 5 சதவிகிதம் @ 25 கிலோ/எக்டர், நொச்சி இலைப்பொடி சாறு 5 சதவிகிதம், ஐப்போமியா இலைப் பொடி சாறு 5 சதவிகிதம், வேல மர இலைப் பொடி சாறு 5 சதவிகிதம்.
முதிர்வண்டை தின்னும் கூர்மூக்கு நாவாய்ப்பூச்சி மீத்தைல் பாரத்தியான் தெளிக்கவும் வண்டுகளை கைவலைகள் கொண்டு சேகரித்து அழிக்க வேண்டும்