அறிகுறிகள்:
- உள்ளே உள்ள இளம் திசுக்களை உண்ணும்.
- மஞ்சள் கலந்த வெள்ளைநிற நீளவாட்டு கொப்புளம் துளையுடன் காணப்படும்.
- இலைகள் சுருங்கும் பயிர்கள் குட்டை வளர்ச்சியுடன், முதிர்ச்சி அடைவது தாமதமாகும்.
- இளம் இலைகள் நுனியின் அருகில் கீழ்ப்புறமாக தொங்கும்.
- குருத்து ஈக்கள் இலைப்பரப்பைத் தாக்கும். தாக்குதலின் ஆரம்ப நிலையில், இலை ஓரங்களில் வெள்ளைநிற குறுகலான கோடுகளுடன் காணப்படும். இலைகளின் மீது பூச்சிகள் கடித்த புள்ளிகள் வரிசைகளில் காணப்படும்.
- காற்று வீசும் போது சேதமான இலைகள் எளிதாக உடைந்துவிடும்.
|
பூச்சியின் விபரம்:
- முட்டை : வெள்ளை நிறத்தில், சுருள் வடிவமாக, இலைகளின் இருபக்கங்களிலும் தனியாக முட்டைகளை இடும்.
- புழு : புதிதாக வெளி வந்த புழு கண்ணாடி போன்று, மங்கிய வெள்ளை நிறத்தில் காணப்படும். பின் வளர்ச்சியடையும் போது மஞ்சள் நிறத்திற்கு மாறிவிடும். புழுக்கள் இலையின் கீழ்நோக்கிச் சென்று குருத்துக்குள்ளே சேதத்தை ஏற்படுத்தும். சேதம் ஏற்பட்ட இலைகளின் மேல் சிறு துளைகளும், இலை ஓரத்தில் வெள்ளை மற்றும் மஞ்சள் நிறப் புள்ளிகளுடனும் காணப்படும்.
- கூட்டுப்புழு : இலையுறைகளுக்கிடையே கூட்டுப்புழு உண்டாகிறது. அங்கு கூட்டுப்புழு தண்டுகளுடன் தளர்வாக ஒட்டிக் கொண்டிருக்கும். கூட்டுப்புழு இளம் பழுப்பு நிறத்திலிருந்து அடர் பழுப்பு நிறமாகவும், பகுதி நீள் உருளை வடிவமாகவும் காணப்படும்.
- முதிர்பூச்சி : வளர்ச்சிபெற்ற பூச்சிகள் அடர்சாம்பல் நிறத்தில் இருக்கும். இவை 1.8-2.3 மி.மீ அளவுடன் காணப்படும்.
|