கூண்டுப் புழு- நெல் பயிரைத் தாக்கும் பூச்சிகள்
பயிர் :நெல்
1. நாற்றங்கால் பூச்சிகள்
2. நடவு வயல் பூச்சிகள்
நாற்றங்கால் பூச்சிகள்:
3.கூண்டுப் புழு: நிம்புலா டிபன்டாலிஸ்
அறிகுறிகள்:
தூர்களை சுற்றி குழல் வடிவ கூண்டுகள்
துார்களைச் சுற்றி குழாய் வடிவ கூடுகள் மிதந்து கொண்டிருக்கும்
புழுக்கள் இலைகளில் உள்ள பச்சைத் திசுக்களை உண்ணுதல்
- இலைகளின் பச்சையத்தை சுரண்டி உண்ணுவதால், இலைகள் வெள்ளைநிறக் காகிதம் போல் தோன்றும்.
- இலையின் நுனிப்பகுதியை அறுத்தால் தூர்களைச் சுற்றி குழாய் வடிவ கூண்டுகள் காணப்படும்.
- குழல் வடிவ கூண்டுகள் நீரின் மீது மிதந்து கொண்டிருக்கும்.
- கத்திரிக்கோல் கொண்டு சரியான கோணத்தில் வெட்டப்பட்டது போல் இலைகள் வெட்டப்பட்டிருக்கும்.
பூச்சியின் விபரம்:
- முட்டை :முட்டைகள் இளம் மஞ்சள் நிறத்தில், தட்டு போன்று, மென்மையாகவும், ஒழுங்கற்ற வடிவத்திலும் காணப்படும். நீரின் மீது மிதந்து கொண்டிருக்கும் இலைகளின் அடிப்பகுதிகளில் முட்டைகள் இடப்பட்டிருக்கும்.
- புழு:புழுக்கள் பச்சை நிறத்தில், ஆரஞ்சு பழுப்பு நிறத் தலைப்பகுதியுடன் காணப்படும். ஒவ்வொரு புழுவும் குழல்வடிவக் கூடுக்குள் உயிர் வாழும். இந்த கூடுகள் இலைகளில் தொங்கிக்கொண்டிருக்கும். நன்கு வளர்ச்சியடைந்த புழுக்கள் 15 மி.மீ நீளம் வரைக் காணப்படும்.
- கூட்டுப்புழு :இலைக்கூடுகளுக்குள் கூட்டுப்புழு உருவாகிறது. புதிதாக உருவான கூட்டுப்புழுக்கள் பால் போன்று வெண்மை நிறத்தில் தோன்றி, பின் இளம் மஞ்சள் நிறத்திற்கு மாறி விடும்.
- முதிர்பூச்சி:சிறியதாக, வெள்ளை நிறத்துடன், மங்கிய பழுப்பு நிற அலை போன்ற குறிகளுடன் காணப்படும். ஆண் பூச்சிகளை விட பெண் பூச்சிகள் பெரியதாக இருக்கும். இரவு நேரத்தில் தான் முட்டையிடுதல் நடைபெறும்.
கட்டுப்பாடு:
- துார்களிலிருக்கும் புழுக்களை கீழே விழச் செய்ய, இளம்பயிர்களின் குறுக்கே கயிரைப் போட்டு இழுத்தால் கூடுகள் நீரில் விழும். பின் வயலிலுள்ள நீரை வடிய செய்யலாம் அல்லது வயலின் ஒரு புறத்திலிருந்து மறுபுறத்திற்கு நாற்றின் மீது படும்படி கயிரைக் கொண்டு இழுத்தால் முட்டைகளும் கீழே விழுந்துவிடும்.
- ஒரு ஏக்கருக்கு ஆறு லிட்டர் என்ற அளவில் மண்ணெண்ணெய் பயன்படுத்தி கூண்டுப்புழுக்களை கட்டுபடுத்தலாம்.
- மிதைல் பாரத்தியான் 0.05% (அ) மோனோகுரோட்டோபாஸ் 0.05% (அ) குயினைல்பாஸ் 0.05% தெளிக்க வேண்டும்.
- இரை விழுங்கியான நத்தைகள் நெல் கூண்டுப்புழுக்களின் முட்டைகளை உண்ணுகின்றன.
- நீர்த்துளை வண்டுகள் மற்றும் உண்மை நீர்வாழ் வண்டுகள் இதன் புழுக்களை உட்கொள்கின்றன.