இலைப்பேன்

16. இலைப்பேன்: ஸ்டெஃங்கீட்டோத்ரிப்ஸ் பைபார்மிஸ்

தாக்குதலின் அறிகுறிகள்

  • மென்மையான இலைகளைக் கடித்து சுரண்டி, செடிகளின் சாறை உறிஞ்சிவிடும்.
  • இளம் நாற்றுக்களின் இலைகளில் மஞ்சள் நிற (அல்லது) வெள்ளிநிற கீறல்களுடன் காணப்படும்.
  • இலை நுனி சுருண்டு மேலிருந்து கீழ்நோக்கி காய்ந்தும் காணப்படும்.
  • பூச்சி தாக்கப்பட்டு சிதைவடைந்த இலைகள் அதன் ஓரங்கள் வழியே உள்நோக்கி சுருண்டு விடும்.
  • பூச்சிகள் தாக்குவதால் இலைகள் காய்ந்து, பயிர் வளர்ச்சியும் குன்றிவிடும். நீர் அழுத்த நிலைகளில், சேதம் மிகவும் அதிகமாய்க் காணப்படும்.

 
இலைகள் விளிம்பிலிருந்து உள்நோக்கி சுருட்டப்படும்

பூச்சியின் அடையாளம்

  • முட்டை :
    முட்டைகள் நிறமில்லாமலும், பின் முதிர்ச்சிடையும்போது, வெளிறிய மஞ்சள் நிறமாக மாறிவிடும். இலைத்தாள் திசுக்களின் பிளப்புகளில் முட்டைகள் இடப்பட்டிருக்கும். முட்டையின் மேல்பகுதியின் பாதி வெளிப்படுத்தியிருக்கும்.
  • இளம் பூச்சிகள் : புதிதாக பொரிக்கப்பட்ட இளம்பூச்சிகள் தெள்ளத் தெளிவாக இருக்கும். ஆனால் முதல் தோல் உரித்தலுக்குப் பிறகு மஞ்சளான வெள்ளை நிறமாக மாறி பின் கருப்பான கால்கள், தலை மற்றும் உணர்கொம்புகளை உருவாக்குகிறது. திறக்கப்படாத இளம் இலைகளின் மென்மையான திசுக்களை இளம் புழுக்கள் உட்கொள்ளும்.
  • கூட்டுப்புழு : சுருண்ட இலைகளின் உள்ளே கூண்டுப்புழுவதால் ஏற்படும். மேலும் அதன் புடைவளர்ச்சி மற்றும் இறக்கைகள் வளர்ச்சி தெளிவாகக் காணப்படும்.
  • முதிர்ப்பூச்சிகள் : முதிர்ச்சியடைந்த பூச்சிகள் 1 மி.மீ நீளம் கொண்டு கரும்பழுப்பு முதல் கருப்பு நிறத்துடன் மயிரிழைகளாலான இறகுகளைக் கொண்டிருக்கும். ஆண் பூச்சிகள் பெண் இனப்பூச்சிகளைவிட சிறியதாகவும், மெலிந்தும் காணப்படும். பூச்சித் தொகையில் ஆண் இனப் பூச்சிகள் மிக அரிதாக காணப்படுவதால், கன்னி இனப்பெருக்கமுறையைக் கொண்டுள்ளது. (பாலினச் சேர்க்கையில்லாத இனப்பெருக்கம்)
இளம் பூச்சி
முதிர்பூச்சி

கட்டுப்பாடு:

  • பூச்சி தாக்கப்பட்ட வயலை நீரில் 2 நாட்களுக்கு நன்கு மூழ்கச் செய்ய வேண்டும். செடிப்பேன் கட்டுபாட்டிற்கு இந்த உழவியல் கட்டுப்பாட்டு முறை மிகவும் சிறந்தது.
  • பூச்சி எதிர்க்கும் திறன்/தாங்கும் திறன் கொண்ட இரகங்களைப் பயிரிடுதல் வேண்டும்.
  • கீழ்வரும் ஏதேனும் ஒன்றை நடவு வயல் பருவத்தில் தெளிக்க வேண்டும் : பாஸ்போமிடான் 40 எஸ்எல் 300 மிலி/எக்டர் (அ) மோனோகுரோட்டோபாஸ் 36 எஸ்எல் 500 மிலி/எக்டர்
  • பொருளாதார சேத நிலை அளவு : உள்ளங்கையை நீரால் நனைத்து, பின் நாற்றங்காலில் 12 இடங்களில் பயிர்ச் செடிகளின் மேல் கையைக் கொண்டு செல்ல வேண்டும். 12 முறைகளில், செடிப்பேனின் தொகை 60 எண்ணிக்கையைக் கடந்துவிட்டால் (அ) 10 சதவிகித நாற்றுக்களில் முதல் மற்றும் இரண்டாம் இலைகளின் பாதிப்பரப்பு சுருண்டு காணப்படும்.
  • கொன்றுண்ணி செடிப்பேன்கள் இளம் பூச்சிகள் மற்றும் முதிர்ப்பூச்சிகளை உட்கொண்டு அதனை அழிக்கின்றன.
  • பொறி வண்டுகள், பூ நாவாய்ப்பூச்சி, செம்பலினிடு வண்டுகள் ஆகியவை இளம் பூச்சிகள் மற்றும் முதிர்ப்பூச்சிகளை உண்ணும்.
நாற்றங்காலில் நீரை தேக்கி
நிறுத்தவும்
பூச்சிக்கொல்லி தெளிக்கவும் இரை விழுங்கி இலைப்பேன்கள்