5. இலை சுருட்டுப்புழு : நேப்ஃபாலோகுரோஸிஸ் மெடினாலிஸ் |
தாக்குதலின் அறிகுறிகள்:
- இலைகள் நீள் வாக்கில் மடிக்கப்பட்டிருக்கும்.
- புழுக்கள் இலைகளின் பச்சை நிற திசுக்களை சுரண்டுவதால் இலைகள் வெண்மையாக மாறி காய்ந்துவிடும்.
- தீவிர தாக்குதலின்போது முழு நெல் வயலும் வெண்மையான நிறத்தில் காய்ந்தது போல் காட்சியளிக்கும்.
- இலைகள் நீள்வாட்டில் சுருண்டு, புழுக்கள் அதனுள்ளே இருந்துவிடும்.
|
பூச்சியின் அடையாளம் :
- முட்டை :தட்டையாக, முட்டை வடிவத்தில், மஞ்சளான வெள்ளை நிறத்தில் காணப்படும்.
- புழு : பச்சையான நிறத்தில் ஒளி கசியும் தன்மை கொண்டு விளங்கும். முன்மார்புக் கேடயம் நுனி நோக்கி நிமிர்ந்தும், பக்கவாட்டில் உருளையாகவும் காணப்படும்.
- கூட்டுப்புழு : கூட்டுப்புழுவின் காலம் 7-10 நாட்கள்.
- முதிர் பூச்சி : அந்துப் பூச்சியானது மஞ்சளான பழுப்பு நிற இறக்கைகளைக் கொண்டது. அதில் நிறைய கருப்பு அலை போன்ற கோடுகள் நடுவிலும், இறக்கைகளின் ஓரத்தில் கருப்புநிற பட்டையான கோடுடனும் காணப்படும்.
|
|
|
|
|
முட்டை |
புழு |
முதிர் பூச்சி |
வெள்ளை மற்றும் காய்ந்த இலைகள் |
|
கட்டுப்பாடு:
- இலைச்சுருட்டுப் புழுவிற்கு எதிர்ப்புத்திறன் கொண்ட இரகங்களான காவேரி, அகாலி, டிகேஎம் 6, டிகேஎம் 12, ஏடிடீ 46, டிபிஎஸ் 2, டிபிஎஸ் 3, ஏடிடீ 44, பிஒய் 4, கைராளி, அகல்யா குஞ்சு குஞ்சு வர்ணா, குஞ்சு குஞ்சு பிரியா, ரேஷ்மி (பிபீடி 44), நீரஜா (பிபீடி 47) மற்றும் தீப்தி ஆகிய இரகங்களைப் பயிரிடுதல்.
- வரப்புகளை சீராக்கி அதனை சுத்தமாக வைத்தல் மற்றும் புல் இனக்களைகளை நீக்க வேண்டும்.
- முள்ளுள்ள கொப்பு கொண்டு இலை மடிப்புகளைத் திறக்க வேண்டும்.
- பொருளாதார சேத நிலை அளவு : தழைப்பருவத்தில் 10 சதவிகிதம் இலைச்சேதம் மற்றும் பூத்தல் பருவத்தில் 5 சதவிகிதம் கண்ணாடி இலைச் சேதமும் ஏற்படும்.
- பொருளாதார சேத நிலை அளவைப் பொறுத்து கீழ்வரும் ஏதேனும் ஒரு பூச்சிக் கொல்லிகளை தெளிக்க வேண்டும் : ஃபெனிட்ரோத்தியான் 50 இசி (திரவமாற்றுதிரட்டு) 1000 மிலி/ எக்டர் (அ) மோனோக்ரோட்டோபாஸ் 36 எஸ் எல் 1000 மிலி/எக்டர் (அ) பாசலோன் 35 இசி (திரவமாற்று திரட்டு) 1500 மிலி/ எக்டர் (அ) குயினல்பாஸ் 25 இசி (திரவமாற்று திரட்டு) 1000 மிலி/ எக்டர் (அ) டைக்லோரோவாஸ் 76 (நீரில் கரையும் செறிவு) 250 மிலி/ எக்டர்.
- டிரைக்கோகிரேம்மா கிலோனிஸ் (முட்டை ஒட்டுண்ணிகளை) பயிர் நடவு செய்து 37, 44, மற்றும் 51 நாட்களில் மொத்தம் மூன்று முறை @ 5 சிசி (1 லட்சம் முட்டை ஒட்டுண்ணிகள்/எக்டர்/முறை) என்ற அளவில் விட வேண்டும்.
- முட்டை ஒட்டுண்ணி அட்டைகளை காலை நேரத்தில் வயலில் கட்டவும்.
- வேப்பங்கொட்டைச் சாறு 5 சதவிகிதம் @ 25 கிலோ/எக்டர் (அல்லது) வேப்பெண்ணை 3 சதவிகிதம் ஆகியவற்றை தெளிக்க வேண்டும்.
- கொன்றுண்ணிகள் : நெற்பயிர் நாவாய்ப் பூச்சியான "சைடோரினஸ் லிவிடி பென்னீஸ்" @ 50-75 முட்டைகள்/மீ என்ற அளவில் விடுதல், ஊசித்தட்டான் - "அக்ரியோக்னிமா பிக்மே", பாச்சை - "அனேக்ஸிபா லாங்கிப் பென்னீஸ்" மற்றும் "மெட்டியோக் விட்டாட்டிகோல்லீஸ்", பொறிவண்டு - "மிக்ராஸ்பிஸ் க்ரோசிரா".
- விளக்குப் பொறிகளை வைத்து அந்து பூச்சிகளைக் கவர்ந்து அதனைக் கொல்ல வேண்டும். 5 எக்டருக்கு குறைந்தது ஒரு விளக்குப் பொறியாவது வைக்க வேண்டும்.
- நெற்பயிரின் தழைப் பருவத்தில் பூச்சியுண்ணுகின்ற பறவைகள் நிற்பதற்கான பலகைகளை (40-50/எக்டர்) வயலில் பொருத்துதல் வேண்டும்.
- குறிப்பிட்ட நேரத்திற்கேற்ற கட்டுப்பாட்டு முறைகளுக்கான மயக்கப் பொறிகளின் (10-12/எக்டர்) மூலம் இப்பூச்சிகளைக் கண்காணிக்க வேண்டும். 15-20 நாட்கள் இடைவெளியில் அதன் இனக் கவர்ச்சிப் பொருளை மாற்ற வேண்டும்.
|
|
|
|
டிரைக்கோகிரேம்மா முட்டை ஒட்டுண்ணி அட்டைகளை காலை நேரத்தில் வயலில் கட்டவும் |
வரப்புகளை சீராக்கி அதனை சுத்தமாக வைத்தல் |
விளக்குப் பொறிகளை வைத்து அந்து பூச்சிகளைக் கவர்ந்து கொல்ல வேண்டும் |
|