ஆனைக் கொம்பன் ஈ

2. ஆனைக் கொம்பன் ஈ: ஆர்சியோலியா ஒரைசா

தாக்குதலின் அறிகுறிகள்:

  • புழுக்கள் வளரும் தூர்களை தாக்குகிறது.
  • புழுக்கள் தூர்களை துளைத்து உட்சென்று வளரும் பகுதியை உண்கிறது.
  • தாக்கப்பட்ட தூர்களில் நெற்கதிர் வராது, மேலும் வளர்ச்சிக்குன்றி காணப்படும்.
  • தாக்கப்பட்டத் தூர்கள் வெங்காய இலை போல் அல்லது வெள்ளிதண்டு போல் காட்சியளிக்கும்.
தூர்கள் வெங்காய இலை போல் அல்லது வெள்ளிதண்டு போல் காணப்படும்

பூச்சியின் விபரம்:

  • முட்டை : இந்த ஈயானது நீளமான, உருளை வடிவத்தில், பளப்பளப்பான வெள்ளை அல்லது சிவப்பு அல்லது இளஞ்சிவப்பு நிற முட்டைகளை இலைகளின் அடிப்பகுதியில் தனியாகவோ அல்லது கூட்டமாகவோ (26) இடும்.
  • புழு : புழு 1 மி.மீ நீளமுடன் முன் பகுதியில் கூர்மையாக இருக்கும். இவை இலையுறையின் கீழே ஊர்ந்து சென்று, வளரும் மொட்டுக்குள் நுழைகிறது. அவை உண்ட இடத்தைச் சுற்றி ஒரு முட்டைவடிவ உள்ளிடம் உருவாகும்.
  • கூட்டுப்புழு : கூட்டுப்புழு வெளிவரும் போது அதன் உணர்கொம்புகள் மூலமாக குழலினைச் சுற்றி, வெள்ளித் தண்டின் நுனிப்பகுதிக்கு சென்று, அதனுடைய பின் பகுதி மட்டும் வெளியே தள்ளிக்கொண்டு நிற்கும்.
  • முதிர் பூச்சி : மஞ்சள் கலந்த பழுப்பு நிறத்தில், கொசு போன்று சிறியதாக காணப்படும். ஆண் ஈக்கள் சாம்பல் நிறமாக இருக்கும். இலையிலுள்ள பனித்துளிகளை உட்கொள்ளும்.
புழு முதிர் பூச்சி

கட்டுப்படுத்தும் முறை:

  • பூச்சியின் தாக்குதலுக்கு எதிர்த்து வளரக்கூடிய கிரகங்களான எம்.டி.யு 3, சக்தி, விக்ரம் மற்றும் சுரேக ஆகியவற்றை பயிரிடலாம்.
  • அறுவடை செய்த பின் நிலத்தை உடனடியாக உழ வேண்டும்.
  • பூச்சி உண்ணக்கூடிய மாற்றுவகைப் பயிர்களை அகற்ற வேண்டும்.
  • தழைச்சத்து உரங்களை பரிந்துரை செய்யப்பட்ட அளவு மட்டும் பயன்படுத்த வேண்டும்.
  • புற ஊதா விளக்குப் பொறி வைத்து பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம்.
  • புழு ஒட்டுண்ணியான பிளாட்டிகேஸ்டர் ஒரைசேவை பயன்படுத்தி ஆணைக்கொம்பன் தாக்குதலைத் தவிர்க்கலாம்.
  • பென்தியான் 500 மி.லி. அல்லது பெனிட்ரோதையான் 1000 மி.லி. மருந்து இவற்றில் ஏதேனும் ஒன்றினை பயன்படுத்தி ஆணைக்கொம்பன் தாக்குதலைத் தவிர்க்கலாம்.
  • நாற்றுக்களின் வேர்களை 0.02% குளோர்பைரிபாஸ் கரைசலில் 12 மணி நேரம் நனைய வைத்து பின் நடவு செய்ய வேண்டும்.
  • பொருளாதார சேதநிலை : 10 சதவிகித வெள்ளித்தண்டுகள் (அ) வெங்காய இலைகள். விதைப்பதற்கு முன் முளைவிட்ட விதைகளை 0.2% குளோர்பைரிபாஸ் கரைசலில் 3 மணி நேரத்திற்கு ஊற வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் 30 நாட்கள் வரை பயிர்களுக்கு தாக்குதல் ஏற்படாமல் தடுக்கலாம்.
  • பூச்சி தாக்குதல் இருக்கும் வயல்களில், விதைத்த பத்து நாட்களுக்குள் போரேட் 10ஜி (1.5 கிலோ/எக்டர்), கார்போப்யுரான் 3 ஜி (0.5 கிலோ/எக்டர்), குயினைல்பாஸ் (1.5 கிலோ/எக்டர்) அல்லது குளோர்பைரிபாஸ் 10ஜி (0.5 கிலோ/எக்டர்) ஆகியவற்றின் குறுணைகளை இடவேண்டும்.

 

புற ஊதா விளக்குப் பொறி குளோர்பைரிபாஸ் கரைசலில் நாற்றுகளின் வேர்களை நனைத்து நடவும் உயிர் எதிரி - புழு ஒட்டுண்ணி - பிளாட்டிகேஸ்டர் ஒரைசே