தாக்குதலின் அறிகுறிகள்:
- நோய் தாக்கப்படட பயிர்கள் நாற்றங்காலிலும் வயலிலும் வழக்கத்திற்கு மாறான உயரத்துடன் காணப்படும்.
- பயிர்கள் மெலிந்து, மஞ்சள் கலந்த பச்சை நிற இலைகளுடனும், வெளிரிய பச்சை நிற கண்ணாடி இலைகளையும் கொண்டிருக்கும்.
- நாற்றுக்கள் தூர்விடும் பருவத்தில் காய்ந்துவிடும்.
- பயிரில் தூர்கள் குறைந்தும், இலைகள் காய்ந்தும் காணப்படும்.
- இந்நோய் தாக்கப்பட்ட பயிர்களில் பூக்காமலும், கதிர்கள் அறைகுறையாகவும், பூக்கள் மலட்டுத் தன்மையுடனும் மணிகள் நிரம்பப்படாமலும் இருக்கும். விதைப்பாத்திகளில் நோய் தாக்கப்பட்ட நாற்றுக்கள் வேர்களில் புள்ளிகளுடன் காணப்படும்.
- இந்நாற்றுக்கள் நடவு செய்வதற்கு முன்னோ அல்லது நடவிற்குப் பின்னரோ இறந்துவிடும்.
|
|
|
|
|
|
|
|
பச்சைநிற குருத்து இலைகள் |
|
மெலிவடைந்த தாவரம் |
|
மெலிவடைந்த கணு |
|
பாதிக்கப்பட்ட வயல் |
|
நோய்க் காரணி:
- நோய் காரணிகள் இனக்கலப்பு முறையால் பூசண வித்துக்களை அஸ்கஸ் எனும் பைக்குள் உருவாக்கிறது.
- ஆஸ்கஸ் நீள் உருளை வடிவமாகவும், உந்துருள் வடிவமாகவும், மேல்புறம் தட்டையாகவும் 90-102 x 7-9 மைக்ரோ மீட்டர் அளவு கொண்டது. அவை 4-6 பூசணவித்துக்களுடையது. ஆனால் அரிதாக 8 பூசண வித்துக்களையும் கொண்டிருக்கும்.
- பூசண இழைகள் கிளைகளுடனும், தடுப்புச் சுவருடனும், காணப்படும். மேலும் பூசணங்கள் நுண் பூஞ்சை இழை சிதில்கள் மற்றும் பெரும்பூஞ்சை இழை சிதில்களைக் கொண்டிருக்கும். இவை நுண் மற்றும் பெரும் பூசண இழைகளை உருவாக்குகிறது.
- இழை முடிச்சுகள் 80 x 100 மைக்ரோ மீட்டர் அளவுடையது. இவை வட்டமாக கரு நீள நிறமுடன் காணப்படும். இலைத்துளைகள் ஏறக்குறைய மஞ்சளாக, பழுப்பு நிறமாக அல்லது ஊதா நிறமாகவும் இருக்கும்.
|
கட்டுப்பாடு:
- சுத்தமான விதைகளைப் பயன்படுத்தவேண்டும். உப்பு நீரைப் பயன்படுத்தி எடைகுறைவான நோய் தாக்கப்பட்ட விதைகளை விதைக்குவியலிருந்து பிரித்தெடுக்க வேண்டும்.
- விதைகளை விதைக்கும்முன் திரம் 4 கிராம்/கிலோ விதைக்கு அல்லது கார்பென்டசிம் 2 கிராம்/கிலோ விதை என்ற அளவில் கலந்து விதை நேர்த்தி செய்யவும்
- தியோபனேட்மிதைல், அல்லது பெனோமைல் போன்ற பூச்சிக்கொல்லிகளுடன் கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
|
|