12. புகையான்: நிலபர்வட்டா லூகன்ஸ் |
தாக்குதலின் அறிகுறிகள்:
- பயிர்கள், தீய்ந்தது போல் மஞ்சள் அல்லது பழுப்பு நிறமாகவும், முற்றிலும் காய்ந்தும் காணப்படும்.
- முதிர்ச்சியடைந்த பயிர்கள் காய்ந்து வட்டமான திட்டுகளாகக் காணப்படும். மேலும் பயிர்கள் சாய்ந்து விடும்.
- நீர் மட்டத்திற்கு மேலிருக்கும் பயிரின் அடிப்பகுதியில் இளங்குஞ்சுகள் மற்றும் முதிர்பூச்சிகள் ஒட்டிக்கொண்டிருக்கும்.
- தாக்கப்பட்ட பயிர்கள் முற்றிலும் காய்ந்து "தீய்ந்த மாதிரி" காட்சியளிக்கும். பழுப்புத் தத்துப்பூச்சியானது புல்தழைகுட்டை நோய், காய்ந்த குட்டை நோய் மற்றும் வாடிய குட்டை நோய் ஆகியவற்றைப் பரப்பும் உயிரியாகத் திகழ்கிறது.
- தத்துப்பூச்சிகளால் ஏற்படும் "பயிர் தீய்ந்தது" போன்ற அறிகுறிகளை மற்ற "தீய்ந்த" அறிகுறிகளிலிருந்து அதில் இருக்கும் கரும் புகைப்பூசணத்தின் மூலமாக வேறுபடுத்த முடிகிறது. நச்சுயிரி தாக்கப்பட்ட பயிர்களையும் கண்டறிய முடிகிறது.
|
|
பயிர் தீய்ந்தது போன்ற தோற்றம் |
|
பூச்சியின் அடையாளம்
- முட்டை : இலையுறைகளில் 2-12 தொகுதிகளாக முட்டைகள் இடப்பட்டிருக்கும். (பயிரின் அடிப்பகுதியின் அருகில் அல்லது இலைத்தாள்களின் அடிப்பக்க நடுநரம்புகளில்), வெள்ளையான, ஒளி ஊடுருவுகின்ற, மெலிந்த நீள் உருளை வடிவிலும், வளைவான முட்டைகள் 2 வரிசைகளில் நேர்கோட்டில் வைக்கப்பட்டிருக்கும். (வட்டமான சற்று குவிந்த வடிவத்திலுள்ள பெண் பூச்சியால் உருவான முட்டைதோலால் முட்டைகள் மூடப்பட்டிருக்கும். பயிர்ச் செடியின் பரப்பிலிருந்து நுனிகள் மட்டுமே வெளியே துருத்திக் கொண்டிருக்கும்).
- இளம்பூச்சி : புதிதாக பொரிந்து, வெளிவந்த இளம் உயிரிகள் பருத்தி போன்று வெண்மையான நிறத்தில், 0.6 மி.மீ நீளத்துடன் இருக்கும். பின் 5 வது வளர்ச்சிநிலையில் இவை ஊதா நிறமான பழுப்பு நிறம் போன்றும், 3.0 மிமீ நீளத்துடன் மாறிவிடும்.
- முதிர்ப்பூச்சிகள் : முதிர்ச்சியடைந்த தத்துப்பூச்சி 4.5-5.0 மிமீ நீளத்துடன், மஞ்சளான பழுப்பு முதல் கரும்பழுப்பு நிற உடலைக் கொண்டிருக்கும். அதன் இறக்கைகள் நிறமில்லாமல், மங்கிய மஞ்சள் நிறமாகக் காணப்படும். இரண்டு தனிச்சிறப்புடைய இறக்கை அமைப்புகளைக் கொண்டது. "நீளிறக்கைகள்" மற்றும் "சிற்றிறக்கைகள்".
- இறக்கை வெளிப்புற அமைப்பு பல காரணிகளால் துாண்டப்படுகின்றது. அதாவது, இளம் உயிரிப் பருவத்தில் கூட்டமாகவும், உணவின் அளவு மற்றும் தரம் குறைந்தும், குறுகிய நாள் அளவு, மற்றும் குறைந்த வெப்பநிலை ஆகியவை முதிர்ச்சி நிலையை மேம்படுத்துகின்றன.
|
|
|
முதிர்பூச்சி |
|
கட்டுப்படுத்தும் முறை
- அருணா, கர்நாடகா, கார்த்திகா, கிருஷ்ணவேணி, பி.ஒய்.3, கோ 42 போன்ற பூச்சி தாக்குதலுக்கு எதிர்த்து வளரக்கூடிய ரகங்களை பயிரிடலாம்.
- நெருக்க நடவு முறையைத் தவிர்க்க வேண்டும். 30 செ.மீ அளவுக்கு கலவன் பாதை விட வேண்டும்.
- தேவைக்கு அதிகமான தழைச்சத்து உரங்களை பயன்படுத்துதலைத் தவிர்த்தல் வேண்டும்.
- பழுப்பு தத்துப்பூச்சிகளின் வளர்ச்சியைக் குறைப்பதற்கு தழைச்சத்து உரத்தை பிரித்திடுதல் வேண்டும்.
- விளக்கு பொறி அமைத்து புகையானை கவர்ந்து அழிக்கலாம்.
- பகல் நேரங்களில் மஞ்சள் நிற பொறிகளைப் பயன்படுத்துதல் வேண்டும்.
- வெள்ளொளித் தன்மையுடைய விளக்குப் பொறிகளை 1-2 மீட்டர் உயரத்தில் (@ 4/ஏக்கர்) பொருத்தி பூச்சிகளின் தொகையைக் கண்காணிக்க வேண்டும்.
- வயலில் நன்றாக தண்ணீர் வடிந்த பிறகு மருந்து தெளிக்க வேண்டும்.
- நேரிடையாக மருந்தை தூர்களின் அடிப்பகுதியில் தெளிக்க வேண்டும்.
- பொருளாதார சேத நிலை அளவு: ஒரு குத்துக்கு 1 சிலந்தி இருக்கும் நிலையில் ஒரு துாருக்கு 2 பழுப்பு தத்துப்பூச்சி இருக்கலாம். சிலந்திகள் இல்லையெனில் துாருக்கு 1 என்ற எண்ணிக்கையில் புகையான்கள் இருக்கலாம். கொன்றுண்ணி சிலந்தி இல்லாத நிலையில் ஒரு துாருக்கு 1 தத்துப்பூச்சி என்றும் சிலந்திகள் 1/குத்து என்ற அளவில் இருக்கும்போது துாருக்கு 2 தத்துப்பூச்சிகள் என்ற எண்ணிக்கையில் இருக்கலாம்.
- பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்துவதற்கு முன்னர் வயலிலுள்ள நீரை வடிகட்ட வேண்டும். பின், பயிர்ச்செடிகளின் அடிப்பகுதியில் பூச்சிக்கொல்லிகளைத் தெளிக்க வேண்டும்.
- சின்தடிக் பைரித்ரையாட், மெதில் பாரத்தியான், பென்தியான், குயினால்பாஸ் போன்ற பூச்சி மருந்துகள் உபயோகித்தலைத் தவிர்க்க வேண்டும்.
- பாஸ்போமிடான் 1000 மிலி (அ) மோனோகுரோட்டாபாஸ் 1250 மிலி (அ) பாஸலோன் 1500 மிலி மருந்தைத் தெளித்து புகையானைக் கட்டுப்படுத்தலாம்.
- இயற்கை எதிரிகளான "லைகோசா சூடோஅன்னுலேட்டா, "சிர்டார்ஹினஸ் லிவிடிபென்னிஸ்" ஆகிய முதிர்நிலைப் பூச்சிகள் (200-250 நாவாய்ப் பூச்சிகள்/எக்டர்) பழுப்பு இலைத் தத்துப்பூச்சிகளின் அதிகத் தாக்குதலின் போது 10 நாட்கள் இடைவெளியில் அவற்றை விடுவிக்க வேண்டும்.
- முட்டைகளின் பொதுவான ஒட்டுண்ணிகள் "குளவி-பூச்சிகளின் வரிசைகள்" ஆகும். நாவாய்ப்பூச்சிகள் மற்றும் எண்கால் சிலந்திகள் ஆகியவை முட்டைகளை உட்கொள்ளும். முட்டைகள் மற்றும் இளம்பூச்சிகள் இரண்டையும் நாவாய்ப்பூச்சிகள் உட்கொள்கிறது. பொதுவான ஒட்டுண்ணிகளால் இளம்பூச்சிகள் மற்றும் முதிர்ப்பூச்சிகள் உட்கொள்ளப்படுகின்றன. குறிப்பாக சிலந்திகள் மற்றும் பொறிவண்டுகள் இதனை உட்கொள்கின்றன.
- வேப்பெண்ணை 3 சதவிகிதம், 15 லிட்டர்/எக்டர் (அ) இலுப்பை எண்ணை 6 சதவிகிதம் 30 லிட்டர்/எக்டர் (அ) வேப்பங்கொட்டைச்சாறு 5 சதவிகிதம் 25 கிலோ/எக்டர்.
|
|
|
|
|
கலவன் பாதை விட வேண்டும் |
வெள்ளொளித் தன்மையுடைய விளக்குப் பொறி |
மஞ்சள் நிற பொறி |
இலுப்பை எண்ணை |
|