நெல் ஸ்கிப்பர்

4. நெல் ஸ்கிப்பர்: பெலோப்பிடாஸ் மேத்தியாஸ்

அறிகுறிகள்:

  • இலையின் நுனியை கீழ்நோக்கி சுருட்டும் அல்லது அதே இலையை இரு பக்கமும் சுருட்டும் அல்லது அடுத்தடுத்த இரு இலைகள் பட்டுப்போன்ற நுால்களால் ஒன்று சேர்க்கப்பட்டு, ஒரு கூடு போன்று உருவாக்கப்பட்டிருக்கும்.
  • பின்புறத்திலிருந்து இலைகள் சுருண்டுவிடும்
  • புழுக்கள் உள்ளிருந்து, திசுக்களை சுரண்டி உண்ண ஆரம்பிக்கும்.
இலைகளை கீழ் நோக்கி சுருட்டி, திசுக்களை சுரண்டும் இரு இலை ஓரங்களை சேர்த்து மடித்து, உள்ளிருந்து திசக்களை சுரண்டும்

பூச்சியின் விபரம்:

  • புழு – மங்கிய பச்சை நிறத்துடன் தெளிவான தலை பகுதியுடன் காணப்படும்.
  • முதிர்ப்பூச்சி – பழுப்பு நிற இறக்கைகளுடன் வளைந்த உணர் கொம்புடன் இருக்கும்.

 

புழு முதிர் பூச்சி

கட்டுப்பாடு:

  • சிறு குளவிகள் ஸ்கிப்பர் பூச்சிகளின் முட்டைகளின் மீது ஒட்டுண்ணியாகச் செயல்பட்டு உண்டுவிடும். அதன் புழுக்களை பெருங்குளவிகள் மற்றும் குதிரை ஈ(டேக்னிட் ஈ) வகைகள் உட்கொள்ளும். பின் இதனை கொலை நாவாய்ப்பூச்சிகள் மற்றும் காதிடுக்கிப் பூச்சிகள் இரையாக்கிக் கொள்ளும். முதிர் பூச்சிகள் பறக்கும்போது வலைச் சிலந்திகள் உட்கொள்ளும்.
  • டிரைக்கோகிராம்மா ஜபோனிகம் என்ற முட்டை ஒட்டுண்ணியை பயிர் நடவு செய்த 30 மற்றும் 37 வது நாட்களில் இருமுறையும், டிரைக்கோகிராம்மா கிலோனிஸ் ஒட்டுண்ணியை 37,44 மற்றும் 51 வது நாட்களில் மூன்று முறையும் விடுவிக்க வேண்டும். அதனைத் தொடர்ந்து மோனோகுரோட்டோபாஸ் (1000 மிலி/எக்டர்) என்ற அளவில் நடவு செய்த 58, 65 மற்றும் 72 வது நாட்களில் மூன்று முறை தெளிப்பதால் பூச்சிகளின் எண்ணிக்கையை குறைக்க முடியும்.
  • அபன்டீல்ஸ் ரூஃபிரகஸ், மீடியோரஸ் சிற்றினம், சூடோபெரிசேட்டா ஒரியன்டேலிஸ் போன்ற புழு ஒட்டுண்ணிகளை வயலில் வெளிவிட வேண்டும்.
  • ஒட்டுண்ணி குளவிகள் கூட்டுப்புழுக்களின் மீது ஒட்டுண்ணியாக வாழ்வதால், இதன் தாக்குதலை கட்டுபடுத்தலாம்.
  • காகங்கள், நாரைகள் போன்ற இரை விழுங்கிகள் புழுக்களை உண்கின்றன.
  • நச்சுயிரிகளும் ஸ்கிப்பர் புழுக்களை தாக்குகின்றன. எனவே,என்.பி.வி உயிர் நச்சுக்கொல்லி தெளிக்கவும்.
  • வயலில் நீரை வடிய செய்துவிட்டு, பின் மாலை வேலைகளில் குளோர்பைரிபாஸ் 20 இ.சி. ஒரு எக்டருக்கு 80 மிலி என்ற அளவில் தெளிக்க வேண்டும்.
  • மோனோகுரோட்டாபாஸ் 36 டபுள்யூ.எஸ்.சி 500 மி.லி / ஹெக் தெளிக்க வேண்டும்.
என்.பி.வி உயிர் நச்சுக்கொல்லி தெளிக்கவும் டிரைக்கோகிராம்மா ஜபோனிகம் முட்டை ஒட்டுண்ணிகளை வயலில் விடவும் ஸ்கிப்பர் புழுவை தாக்கும்
டேக்னிட் ஈ