நீரில் கரையும் உரங்களின் பயன்பாடுகள் - ஒரு பார்வை
முக்கியமான சில நீரில் கரையும் உரங்களின் பயன்கள்:
19:19:19:
மிதமான அளவில் வேர் மற்றும் புதிய துளிர்களின் வளர்ச்சியை தூண்டுகிறது.
தழைச்சத்து, மணிச்சத்து மட்டும் சாம்பல் சத்து ஆகிய மூன்றும் சரிவிகித அளவில் இருப்பதால் இதை அனைத்து பயிர்களுக்கும் அனைத்து மிதமான வளர்ச்சி பருவத்திலும் பயன்படுத்தலாம்.
இதில் மிகவும் சிறிய அளவு நுண்ணூட்ட சத்துக்களும் இருக்கும்.
கால்சியம் நைட்ரேட்:
பயிர்களின் செல் வளர்ச்சி அதிகப்படுத்துவதால் இலை மற்றும் தண்டு பகுதிகளின் செயல்பாடுகளை அதிகப்படுத்துகிறது.
பழ பயிர்களில் செடிகளின் வளர்ச்சிக்கு உதவி புரிவதுடன் காய் அல்லது பழங்களின் அறுவடைக்குப் பின் பழங்கள் அழுகாமல் சற்று வாழ்நாளை அதிகரிக்கிறது.
இதைப் பகுதியில் உள்ள செல்களின் செயல்பாட்டை அதிகரித்து அதிக உணவை உற்பத்தி செய்வதால் பயிரின் மகசூல் அதிகரிக்கிறது.
மண்ணின் காரா அமில தன்மையை சரி செய்து இதர நுண்ணூட்ட சத்துக்கள் செடிகளுக்கு கிடைக்கப் பெறுவதை இது உறுதிப்படுத்தும்.
காய்கள் உதிர்வதை குறைத்து காய் பிடிப்பு திறனை அதிகரிக்கிறது.
பொட்டாசியம் நைட்ரேட் (13:00:45):
அதிக சாம்பல் சத்து இருப்பதால் பூ பூத்தலை ஊக்கப்படுத்துகிறது.
செடிகளுக்கு தட்பவெப்ப சூழ்நிலை, நோய் மற்றும் பூச்சி தாக்குதலால் ஏற்படும் சவால்களை தாங்கி வளரும் தன்மை கொடுக்கிறது.
பிஞ்சுகள் உதிர்வதை குறைத்து காய்களின் எண்ணிக்கை, அளவு மற்றும் சுவையை மேம்படுத்துகிறது.
இரண்டாம் நிலை ஊட்டச்சத்துக்களான கால்சியம் மற்றும் மெக்னீசியம் செடிகளுக்கு கிடைக்க இது வழிவகை செய்யும்.
அனைத்து வகையான பயிர்களுக்கும் இதை பயன்படுத்தலாம்.
மோனோ அமோனியம் பாஸ்பேட் (12:61:00):
அதிக மணிச்சத்து இருப்பதால் பயிர்களின் ஆரம்ப நிலையில் பயன்படுத்துவதால் நல்ல வேர் வளர்ச்சியை அடைவதுடன் புதிய துளிர்களையும் ஊக்குவிக்கிறது.
மரவள்ளி, நிலக்கடலை, முள்ளங்கி, கேரட் போன்ற நிலத்திற்கு அடியில் விளையக்கூடிய கிழங்கு வகை பயிர்களில் மகசூலை அதிகப்படுத்துகிறது.
வேர் வளர்ச்சியை அதிகப்படுத்துவதால் வறட்சியை தாக்கு பிடித்தல், நோய் மற்றும் பூச்சி தாக்குதலை தாங்கி வளர்தல், பூக்கள் உதிர்வதை குறைத்து மற்றும் காய் பிடிப்பு திறனை அதிகப்படுத்துகிறது.
13:40:13:
பயிர்களின் ஆரம்ப நிலையில் கொடுப்பதால் நல்ல வேறு வளர்ச்சி காணப்படும். இதனால் பயிர்களில் நல்ல வளர்ச்சி, நோய் எதிர்ப்பு திறன் மற்றும் வறட்சியை தாங்கி வளர்தல்.
இதனால் பூ பிடித்தல் அதிகமாக காணப்படும் பூ உதிர்தல் குறையும் காய் பிடிப்பு திறன் கூடுதலாகும் இதனால் மகசூல் எடை மற்றும் தரம் மேம்பட்டு காணப்படும்.
பயிர்கள் விரைந்து பூ பிடிக்க இது உதவி புரிகிறது.
கால்சியம் மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக் கொண்ட நீரில் கரையும் உரத்துடன் இதனை கலக்கக் கூடாது.
00:52:34 (Mono potassium phosphate):
பயிரின் ஆரம்ப காலத்தில் வேர் வளர்ச்சிக்காகவும் பின்னர் மகசூலின் தரத்தை மேம்படுத்துவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.
பழங்கள் நன்றாக முதிர்ச்சி அடைவதற்கும் நல்ல நிறம் பெறுவதற்கு இது உதவி புரிகிறது.
மேலும் பழத்தின் சுவை மேம்பட்டு காணப்படும்.
குறிப்பாக இது மாதுளை சாகுபடியில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
00:00:50+17.5 sulphur (potassium sulphate):
பிரதானமாக பூப்பூக்கும் தருணத்தில் இருந்து மகசூல் அறுவடை செய்யும் வரை பயன்படுத்தப்படுகிறது.
மகசூல் நல்ல முதிர்ச்சி மற்றும் அதிக மகசூல் பெற பயன்படுகிறது.
பல்வேறு நோய் மற்றும் பூச்சி தாக்குதல்களுக்கு எதிர்ப்புத் திறன் அளிக்கிறது.
05:09:35+ நுண்ணூட்டம்:
இதில் பிரதானமாக சாம்பல் சத்து உள்ளது. பயிர்கள் பூக்கும் தருணத்தில் இருந்து அறுவடை செய்யும் வரை பயன்படுத்தலாம்.
தொடர்ச்சியாக அறுவடை செய்யும் பயிர்களில் குறிப்பாக காய்கறி பயிர்களுக்கு இது ஏற்ற உரம்.
இதனால் மகசூலின் அளவு, தரம், நிறம் மற்றும் சுவை மேம்படும்.
இதனை இழை வழியாகவும் சொட்டுநீர் பாசனம் வழியாகவும் கொடுக்கலாம்.
இது மட்டும் இன்றி இதில் நுண்ணூட்ட ஊட்டச்சத்துக்களும் இருப்பதால் மிகச் சிறப்பாக பயிர்களில் செயல்படுகிறது.
11:42:11:
பயிரின் ஆரம்ப நிலையில் நல்ல வேர் வளர்ச்சி மற்றும் துளிர் வருவதை தூண்டுகிறது.
பூ மற்றும் காய்கள் பிடித்தல், மற்றும் ஒருமித்த நேரத்தில் விளைச்சல் முதிர்ச்சி அடைவதற்கும் உதவி புரிகிறது.
வெங்காயம் கேரட் முள்ளங்கி போன்ற வேர் பகுதியில் விளைச்சலை கொடுக்கக்கூடிய காய்கறி பயிர்களுக்கு மகசூலை அதிகரிக்க உதவுகிறது.
24:24:00:
பயிரின் ஆரம்ப நிலையில் வேர் மற்றும் இலை வளர்ச்சியை ஊக்கப்படுத்துகிறது.
18:18:18+6.10:
பயிரின் அனைத்து வளர்ச்சி நிலையிலும் பயன்படுத்தலாம்.
பயிர்கள் கிளை பிரிவதற்கு மற்றும் தூர்கள் கட்டுவதற்கு பெரிதும் துணை புரிகிறது.
அதிக வெப்பநிலை மிகவும் குறைந்த வெப்பநிலை நோய் மற்றும் பூச்சி தாக்குதல் ஆகியவற்றிற்கு எதிராக எதிர்ப்பு திறன் பெறுகிறது.
பயிரின் வேறு வளர்ச்சி மற்றும் ஒருமித்த நேரத்தில் அறுவடை செய்வதற்கு துணை புரிகிறது.
17:44:00 (Urea phosphate):
விதை முளைப்பு திறனை மேம்படுத்துகிறது.
வேர் வளர்ச்சி, பக்கவாட்டு வேர் வளர்ச்சி மற்றும் பயிர்கள் அதிக தூர்கள் கட்டுவதற்கு உதவி புரிகிறது.
பூ உதிர்வதைத் தடுத்து காய் பிடித்தலை அதிகப்படுத்துகிறது.
ஒட்டுமொத்த மகசூல் தரத்தை மேம்படுத்துகிறது.