இலைப்பேன் - நெல் பயிரைத் தாக்கும் பூச்சிகள்

பயிர் :நெல்

1. நாற்றங்கால் பூச்சிகள்

2. நடவு வயல் பூச்சிகள்

 

நாற்றங்கால் பூச்சிகள்:

  1. இலைப்பேன்: ஸ்டென்கீட்டோதிரிப்ஸ் பைபார்மிஸ்

அறிகுறிகள்:

 

  • இளம் இலைகளை சுரண்டி, சாற்றை உறிஞ்சுகிறது.
  • தாக்கப்பட்ட இளம் நாற்றுக்களில் மஞ்சள் அல்லது வெள்ளை நிற வரிகள் காணப்படும்.
  • தாக்கப்பட்ட இலைகளின் நுனி சுருண்டு இறுதியில் வாடிவிடும்.
  • நாற்றங்கால் மற்றும் நடவு வயலில் பாதிப்புக்களை ஏற்படுத்தும்.

 

பூச்சியின் விபரம்:

  

  • முட்டை : முட்டைகள் நிறமில்லாமலும், பின் முதிர்ச்சிடையும்போது, வெளிறிய மஞ்சள் நிறமாக மாறிவிடும். இலைத்தாள் திசுக்களின் பிளப்புகளில் முட்டைகள் இடப்பட்டிருக்கும். முட்டையின் மேல்பகுதியின் பாதி வெளிப்படுத்தியிருக்கும்.
  • இளம் பூச்சிகள் : புதிதாக பொரிக்கப்பட்ட இளம்பூச்சிகள் தெள்ளத் தெளிவாக இருக்கும். ஆனால் முதல் தோல் உரித்தலுக்குப் பிறகு மஞ்சளான வெள்ளை நிறமாக மாறி பின் கருப்பான கால்கள், தலை மற்றும் உணர்கொம்புகளை உருவாக்குகிறது. திறக்கப்படாத இளம் இலைகளின் மென்மையான திசுக்களை இளம் புழுக்கள் உட்கொள்ளும்.
  • கூட்டுப்புழுசுருண்ட இலைகளின் உள்ளே கூண்டுப்புழு ஏற்படும். மேலும் அதன் புடைவளர்ச்சி மற்றும் இறக்கைகள் வளர்ச்சி தெளிவாகக் காணப்படும்.
  • முதிர்ப்பூச்சிகள்முதிர்ச்சியடைந்த பூச்சிகள் 1 மி.மீ நீளம் கொண்டு கரும்பழுப்பு முதல் கருப்பு நிறத்துடன் மயிரிழைகளாலான இறகுகளைக் கொண்டிருக்கும். ஆண் பூச்சிகள் பெண் இனப்பூச்சிகளைவிட சிறியதாகவும், மெலிந்தும் காணப்படும். பூச்சித் தொகையில் ஆண் இனப் பூச்சிகள் மிக அரிதாக காணப்படுவதால், கன்னி இனப்பெருக்கமுறையைக் கொண்டுள்ளது. (பாலினச் சேர்க்கையில்லாத இனப்பெருக்கம்)

கட்டுப்பாடு:

  • பூச்சி தாக்கப்பட்ட பயிர்களை 1-2 நாட்கள் இடைவெளி விட்டு நீரில் மூழ்கச் செய்ய வேண்டும்.
  • நாற்றுக்களின் மேல் ஈரத்துணியை போட்டு இழுக்க வேண்டும்.
  • பொருளாதார சேத நிலை அளவு : உள்ளங்கையை நீரால் நனைத்து, பின் நாற்றங்காலில் 12 இடங்களில் பயிர்ச் செடிகளின் மேல் கையைக் கொண்டு செல்ல வேண்டும். 12 முறைகளில், செடிப்பேனின் தொகை 60 எண்ணிக்கையைக் கடந்துவிட்டால் () 10 சதவிகித நாற்றுக்களில் முதல் மற்றும் இரண்டாம் இலைகளின் பாதிப்பரப்பு சுருண்டு காணப்படும்.
  • கொன்றுண்ணி செடிப்பேன்கள் இளம் பூச்சிகள் மற்றும் முதிர்ப்பூச்சிகளை உட்கொண்டு அதனை அழிக்கின்றன.
  • பொறி வண்டுகள், பூ நாவாய்ப்பூச்சி, செம்பலினிடு வண்டுகள் ஆகியவை இளம் பூச்சிகள் மற்றும் முதிர்ப்பூச்சிகளை உண்ணும்.

 

  • நாற்றங்காலில் பின்வரும் ஏதேனும் ஒன்றை தெளிக்க வேண்டும்.

பாஸ்போமிடான்

40 எஸ்.எல்

50 மி.லி

மோனோகுரோட்டோபாஸ்

36 எஸ்.எல்

40 மி.லி

  •