7. மஞ்சள் கரிப்பூட்டை நோய் - நெல் பயிரைத் தாக்கும் நோய்கள்

மஞ்சள் கரிப்பூட்டை நோய்: உஸ்டிலாஜினோய்டியா வைரன்ஸ்

தாக்குதலின் அறிகுறிகள்:

  • ஒவ்வொரு தனி தானியமும் மஞ்சள் நிற கனியுடலாக மாற்றம் அடைந்து காணப்படும்.
  • நோய் தாக்கப்பட்ட தானிய நெல்லில் மென்பட்டுத் துணி போன்ற தோற்றத்துடன் பச்சையான கருப்பு நிற நெற்பழ உருண்டைகள் காணப்படும்.
  • முதலில் இந்த உருண்டைகள் மிகவும் சிறியதாகவும் பின் வளர்ச்சியடைந்து 1 செ.மீ அளவு வரை பெரிதாகிறது.
  • இவை நெல் உமிக்களுக்கிடையே காணப்படும் பூப்பகுதிகளை சுற்றியும் காணப்படும். கதிரிலிருக்கும் சில தானியங்கள் மட்டுமே தாக்கப்பட்டிருக்கும் மற்ற அனைத்தும் நல்ல மணிகளாகவே இருக்கும்.
  • பூசண வளர்ச்சி தீவிரமாகும்போது, நெற்பழ உருண்டைகள் வெடித்து ஆரஞ்சு நிறமாக மாறி பின் மஞ்சளான பச்சை அல்லது கரும்பச்சை நிறத்திலும் மாறிவிடுகிறது.
  • பொதுவாக இனப்பெருக்க நிலை மற்றும் பயிர் முதிர்ச்சி நிலைகளில் இந்நோய், தாக்கப்பட்டு கதிரிலுள்ள சில தானியங்களை மட்டும் தாக்கி மற்ற தானியங்களை நல்ல தானியங்களாகவே விட்டுவிடுகின்றன.

நோய் வளர்ச்சிக்கு சாதகமான நிலைகள்:

  • மழை மற்றும் அதிக ஈரப்பதம்
  • அதிக தழைச்சத்துத் தன்மை கொண்ட மண்.
  • அதிக காற்று இருப்பதினால், ஒரு பயிரிலிருந்து மற்றொரு பயிருக்கு பூசண வித்துக்கள் எளிதில் பரவுகின்றன.
  • இழைமுடிச்சுக்கள் மற்றும் இழைவித்துக்களைப் போல் பூசணங்கள் குளிர்காலத்தில் உயிர்பிடித்திருத்தல்.
  • நெற்பயிர் பூத்தல் பருவம்.
         
  பாதிக்கப்பட்ட தாவரம்   மஞ்சள் நிறகனியுடல்   தானியத்தில் பூஞ்சை தொகுப்பு      

நோய்க் காரணி:

  • பூசணவித்து உருண்டைகளில் பூசண இழை வித்துக்கள் உருவாகும். சிறிய பூசண வித்துக்காம்புகளின் மேல் பக்கவாட்டில் உருவாகிறது. பூசண இழைவித்துக்கள் உருளை வடிவத்திலிருந்து நீள் உருளைவடிவமாகவும், பரு போன்றும் 3-5 x 4-6 மீட்டர் அளவிலும் காணப்படும். இளம் பூசண வித்துக்கள் சிறியதாகவும், நிறம் வெளுத்தும் மென்மையாகவும் இருக்கும்.
  • சில பச்சை பூசண வித்து உருண்டைகள் ஒன்று முதல் நான்கு இழைமுடிச்சுக்களை உருவாக்குகிறது. இவ்விழை முடிச்சுக்கள் வயலில் குளிர்காலத்தில் நன்கு உயிர்பிடித்து தொடரும் கோடைக்காலத்தில் அல்லது இலையுதிர்க்காலத்தில் காம்புடைய பாய் பூசனத்தை உருவாக்குகிறது.
  • பூசண இழைமுடிச்சுகளில் இருந்து உருவாகும் இழைவித்துகள்தான் முதன்மை நிலை தாக்குதலை உருவாக்குகிறது எனக் கண்டறியப்படுகிறது.
  • இரண்டாம் நிலை நோய் தாக்குதலில் உறக்கநிலை பூசண இழை வித்துக்கள் நோய்ச் சுழற்சியில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

கட்டுப்பாடு:

  • நோயைத் தாங்கக் கூடிய அல்லது எதிர்க்கும் திறன் கொண்ட இரகங்களைப் பயன்படுத்துதல் வேண்டும்.
  • நெற்பயிர்கள் ஈரமாக இருக்கும்போது வயலில் உழவியல் செயல்களைத் தவிர்க்க வேண்டும்.
  • தாமதமாகப் நடப்பட்ட பயிர்களைக் காட்டிலும் முன் நட்ட பயிர்களில் குறைந்த நெற்பழ உருண்டைகளே காணப்படுகின்றன.
  • அறுவடையின்போது நோய் தாக்கப்பட்டச் செடிகளை அகற்றி அழித்துவிட வேண்டும்.
  • மாற்று பயிர்களை அழிப்பதற்கு, வயல் வரப்புகள் மற்றும் பாசன வாய்க்கால்களை சுத்தமாக வைத்தல் வேண்டும்.
  • மிகுதியான தழைச்சத்து உரம் அளித்தலை தவிர்க்க வேண்டும்.
  • குளிர்ப்பருவத்தில் நோய்த் தாக்கத்தை முறையாகக் கண்காணிப்பது மிகவும் அவசியம்.
  • வைக்கோல் மற்றும் பயிர்த்துார்களை அகற்றி அழித்தல் வேண்டும்.
  • நோயற்ற விதைகளைப் பயன்படுத்த வேண்டும்.
  • ஒரு கிலோ விதைக்கு 2.0 கிராம் என்ற அளவில் கார்பன்டசிம் உடன் விதை நேர்த்தி செய்தல் வேண்டும்.
  • பூச்சிக்களைக் கட்டுப்படுத்துதல்.
  • தழைச்சத்து உரத்தை பிரித்து அளிக்கவேண்டும்.
  • நோய் தாக்கப்பட்ட பயிர் துார்களை அகற்றி அழிக்கவேண்டும்.
  • கதிர் இலைப்பருவம் மற்றும் பால்பருவங்களில் பூசண நோய் தாக்குதலைத் தடுப்பதற்கு காப்பர் ஆக்சிஃகுலோரைடு 2.5 கிராம்/லிட்டர் அல்லது புரோபிகோனசோல் 3 மிலி/லிட்டர் ஆகிய ஏதோ ஒன்றை தெளிக்கவேண்டும்.

இரசாயன முறை:

  • கதிர் இலைப்பருவம் மற்றும் பால்பருவங்களில் பூசண நோய் தாக்குதலைத் தடுப்பதற்கு “காப்பர் ஆக்சிஃலோரைடு 2.5 கிராம்/லிட்டர்” அல்லது “ப்ரோபிகோனசோல்” 10 மிலி/லிட்டர் ஆகிய ஏதோ ஒன்றை தெளிக்கவேண்டும்.
  • கார்பென்டசிம் (2.0 கிராம்/கிலோ விதை) என்ற அளவில் விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
  • துார்விடும் பருவம் மற்றும் பூத்தல் முன் பருவங்களிலும் கார்பென்டசிம் மற்றும் தாமிரம் சார்ந்த பூசணக் கொல்லிகளை தெளிக்கவேண்டும்.